புரோட்டாவுக்கு ஃபேமஸான தூத்துக்குடியில் தற்போது வாப்பிள்ஸ் ஃபேமஸ் ஆகி வருகிறது. வாப்பிள்ஸா…! இது புதுசா இருக்குன்னே என்று நீங்க நினைச்சா அது தான் தவறு.
வாப்பிள்ஸ் என்றால் மாவில் சர்க்கரை, பேக்கிங் பவுடர், சிறிதளவு உப்பு, பால், முட்டை மற்றும் வெண்ணிலா எசன்ஸ் அல்லது தேவைப்படும் எஸன்ஸை சேர்த்து வாப்பிள் இயந்திரத்தில் ஊற்றி எடுத்தால் வாப்பிள்ஸ் தயார்.
இவ்வளவு தான் வாப்பிள்ஸா என்று எண்ணினால் அதுவும் தவறு… இந்த வாப்பிள்ஸில் பிளேவர்கள் சேர்த்து எவ்வளவு ருசியாக கொடுக்கிறோம் என்பதில் தான் இருக்கின்றது. அதை தான் செய்து வருகின்றனர் தூத்துக்குடி சேர்ந்த சாம் மற்றும் சுரேக்கா தம்பதியர்…
இதையும் படிங்க: பாலே இல்லாமல் பல வெரைட்டியில் டீ… ஆச்சரியப்பட வைக்கும் அரேபியன் டீ வகைகள்…
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒரு தம்பதியர் V.E ரோட்டில் சாயங்கால வேளையில் வாப்பிள்ஸ் கடை நடத்தி வருகின்றனர். இவர்கள் செய்யும் வாப்பிள்ஸானது தூத்துக்குடி மக்களால் விரும்பி சாப்பிடப்படுகிறது.
இது குறித்து சுரேக்கா கூறுகையில், “நான் ஆந்திர பிரதேசத்தை சேர்ந்தவர், நான் பியூட்டிஷியன் படிப்பு முடித்துள்ளேன். திருமணத்திற்கு பிறகு என் கணவருக்கு தூத்துக்குடி என்பதால் இங்கு வந்துவிட்டோம்.
எங்கள் திருமணம் காதல் திருமணம் என்பதால் வீடுகளில் எதிர்ப்பாகவே இருந்தது. திருமணத்திற்கு பிறகு ஒரு கட்டத்தில் என் கணவர் பிசினஸில் பெரிதளவு நஷ்டம் ஏற்பட்டு விட்டது. சாப்பிடுவதற்க்கு கூட கஷ்டமாகி விட்டது.
இதையும் படிங்க: மலை மாவட்டத்தை மிரள வைக்கும் மழை… கார்மேகத்தைக் கட்டுப்படுத்த சூஞ்சி ஹப்பா வழிபாடு…
அதன் பிறகு கணவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதற்காக தேடும் போது தான் வாப்பிள்ஸ் யோசனை தோன்றியது. ஆனால் ஆரம்ப காலத்தில் சுற்றியுள்ள உறவினர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் துவங்கி பார்க்கலாம் என்ற எண்ணத்தோடு துவங்கினோம். தொடங்கிய ஒரு சில மாதங்களிலேயே நல்ல வரவேற்பு இருந்தது. மக்களுக்கும் இது மிகவும் பிடித்து தற்போது நன்றாக விற்பனை ஆகின்றது.
எங்களிடம் டபுள் சாக்லேட், ட்ரிபிள் சாக்லேட், கிவி பழம், ஸ்ட்ராபெரி, வாழைப்பழம், பட்டர் ஸ்காட்ச், கிரிக்கெட் போன்ற பல வகையான வாப்பிள்ஸ்கள் இருக்கின்றது. மேலும் பாதாம் பால், பிரௌனி, சாக்லேட் பானி பூரி போன்ற அனைத்தும் இருக்கின்றது” எனத் தெரிவித்தார்.
தாரம் சரியாக அமைந்தால் போதும் பொருளாதாரமும் சரியாக இருக்கும் எனச் சொல்வார்கள். அதை சரியென நிரூபிக்கும் வகையில் வாவ் சொல்ல வைக்கிறது இந்த தம்பதியினரின் வாப்பிள்ஸ் கடை வெற்றி…
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.