இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி ஏற்கனவே தொடரைக் கைப்பற்றியுள்ளது. 3ஆவது போட்டியின் வெற்றி, தோல்வி நடப்புத் தொடரில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்ற போதிலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்த டெஸ்ட் முக்கியத்துவம் பெறுகிறது.
நியூசிலாந்து உடனான டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி 5 போட்டிகளில் விளையாடுகிறது.
தற்போது புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தாலும், இந்திய அணி இன்னும் விளையாடவுள்ள 6 போட்டிகளில், நான்கில் வெற்றி பெற்றால் தான், நேரடியாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை உறுதி செய்ய முடியும். எனவே இந்திய அணி வெற்றிக்கான முனைப்பில் களமிறங்கும்.
Also Read |
IPL 2025 Retention : ஐபிஎல் அணிகள் ரிடென்ஷன் செய்த வீரர்கள் முழு விபரம்…
மும்பையில் இன்று மழைக்கான வாய்ப்பு 65 சதவிகிதம் இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வான்கடே மைதானத்தில் முதல் நாளில் இருந்தே, சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
.