யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூறும் வகையில், வடக்கு, கிழக்கில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் நேற்று (28) நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.

இயற்கை சீற்றத்தையும் பொருட்படுத்தாது, தமிழர் பகுதியில்  நேற்று மாலை இவ்வாறு நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றிருந்தன.

அத்துடன், வீதிகளிலும், நினைவிடங்களிலும் சிகப்பு, மஞ்சள் கொடிகள் பறக்கவிடப்பட்டு அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டிருந்ததுடன், உயிரிழந்தோருக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, கண்ணீரால் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.

முள்ளிவாய்க்காலிலும் பொதுமக்கள் ஒன்றுகூடி நினைவு தினத்தை அனுஷ்டித்திருந்தனர்.

நேற்று (28) மாலை 6.05 மணிக்கு மணியோசை எழுப்பப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டு பின்னர் பிரதான பொதுச் சுடரை ஏற்றி வைக்க, ஏனைய சுடர்களை பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

முல்லைத்தீவு, அளம்பில் இடைவிடாத பெய்து வரும் மழைக்கு மத்தியிலும் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றிருந்தறது.   அத்துடன்,  யாழ்ப்பாணம் – கொடிகாமத்திலும் நினைவு தின நிகழ்வுகள் நடைபெற்றபோது, உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பொதுச்சுடர்கள் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். மேலும், குடத்தனை வடக்கிலும், யாழ்.சாட்டியிலும் மன்னார் ஆட்காட்டிவெளியிலும் நினைவு தின நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டிருந்தன.

 

The post யுத்தத்தில் உயிரிழந்தோருக்காக கொட்டும் மழைக்கு மத்தியிலும் வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் appeared first on Thinakaran.



Source link