ஏ.ஆர். ரகுமான் – சாய்ரா தம்பதி தேனிலவு சென்ற சமயத்தில் நடந்த சம்பவத்தை நினைவுகூர்ந்துள்ளார் அவர்களின் உறவினரான நடிகர் ரஹ்மான்.

இசை புயல் ஏ.ஆர்.ரகுமானை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளது திரையுலகில் அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 29 ஆண்டுகால திருமண முறிவு குறித்து வெளியிட்ட அறிக்கையில், ஒருவரையொருவர் ஆழமாக நேசித்த போதிலும், பதட்டங்களும் சிரமங்களும் அவர்களுக்கிடையே ஒரு தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கிவிட்டதை இருவரும் கண்டறிந்ததையும், இந்த முடிவு அவர்களின் உறவில் குறிப்பிடத்தக்க அழுத்தத்திற்குப் பிறகு வந்திருப்பதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

அதேநேரம், தங்கள் திருமண வாழ்வு முப்பது வயதை எட்டும் என்று நம்பியதாகவும், ஆனால் எல்லாமே கண்ணுக்குத் தெரியாத முடிவாகத் தெரிவதாக ஏ.ஆர்.ரகுமான் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

மேலும், கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களின் கனத்தால் நடுங்கக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ள ஏ.ஆர். ரகுமான், இதய சிதைவுகள் மீண்டும் தங்கள் இடத்தைக் கண்டுபிடிக்கவில்லை என்றாலும் அர்த்தத்தைத் தேடுவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த பலவீனமான அத்தியாயத்தை நாங்கள் கடந்து செல்லும்போது தனியுரிமைக்கு மதிப்பளித்ததற்காக தங்கள் நண்பர்களுக்கு நன்றி என்றும் ஏ.ஆர். ரகுமான் பதிவிட்டுள்ளார்.

விளம்பரம்

இதற்கிடையே, திருமணம் ஆன புதிதில் ஏ.ஆர். ரகுமான் செய்த ஒரு செயலை அவரின் உறவினரான நடிகர் ரஹ்மான் வெளிப்படுத்திய பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்தப் பேட்டியில் ஏ.ஆர். ரகுமானின் இசை மீதான நாட்டம் குறித்து ரஹ்மான் கூறியுள்ளார்.

நடிகர் ரஹ்மானின் மனைவி மெஹருன்னிசாவின் சகோதரி தான் ஏ.ஆர். ரகுமானின் மனைவி சாய்ரா. அந்த வகையில் ரஹ்மானுக்கு அண்ணி முறை சாய்ரா.

Also Read | 25 வயதிலேயே கனவு.. மேட்ரிமோனியில் அக்கவுண்ட்… திருமணம் குறித்து ஐஸ்வர்யா லட்சுமி பகிர்ந்த சீக்ரெட்!

இந்த நிலையில் ஏ.ஆர். ரகுமான் – சாய்ரா தேனிலவு சென்ற சமயத்தில் நடந்த சம்பவத்தை நினைவுகூர்ந்த ரஹ்மான் அதில், “எனக்கு நினைவிருக்கிறது. திருமணம் முடிந்தவுடன் அவர்கள் தேனிலவுக்கு சென்றனர். மலைப்பகுதிக்கு சென்ற அன்று இரவு அவர்களை நான் தொடர்புகொண்டேன். நான் அவர்களை அழைக்கும் 1 மணி ஆகிவிட்டது. போனை எடுத்து பதிலளித்தது சாய்ராதான். ஏற்கனவே சாய்ரா உறங்கிக் கொண்டிருந்தார் போல, அவரிடம் ஏ.ஆர். ரகுமான் எங்கே என்று கேட்டேன்.

அதற்கு, ‘எனக்குத் தெரியாது’ எனக் கூறிய சாய்ரா. அன்றைய தினம் ஏ.ஆர். ரகுமான் வேறொரு அறையில் வீணை பயிற்சி செய்து கொண்டிருந்தார். ஏதோ இசையமைத்துக் கொண்டிருந்தார். ஏ.ஆர். ரகுமான் அப்படிப்பட்ட மனிதர். அவருக்கு ஆன்மிகத்திலும், இசையிலும் நாட்டம் அதிகம்” என்று வெளிப்படுத்தியிருப்பார்.

விளம்பரம்

இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், ஏ.ஆர். ரகுமானின் இசை நாட்டத்தை ரசிகர்கள், இணையவாசிகள் வருகின்றனர்.

.



Source link