நவம்பர் மாதம் தொடங்கியது முதல் தங்கம் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளதால் நகைப்பிரியர்கள் சற்று கவலையடைந்துள்ளார்கள்.

நேற்று (நவம்பர் 28-ஆம் தேதி) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.15 குறைந்து, ரூ.7,090-க்கும், ஒரு சவரன் ரூ.120 குறைந்து ரூ.56,720-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று (நவம்பர் 29-ஆம் தேதி) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.70 அதிகரித்து, ரூ.7,160-க்கும், ஒரு சவரன் ரூ.560 அதிகரித்து, ரூ.57,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

விளம்பரம்
இந்த இனிப்பான பழத்தை சுகர் வந்தவங்களும் சாப்பிடலாமா… சீத்தாப்பழம் தரும் 7 ஆரோக்கியப் பலன்கள்.!


இந்த இனிப்பான பழத்தை சுகர் வந்தவங்களும் சாப்பிடலாமா… சீத்தாப்பழம் தரும் 7 ஆரோக்கியப் பலன்கள்.!

இதேபோன்று 18 காரட் தங்கம், ஒரு கிராம் ரூ.55 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.5,915-க்கும், ஒரு சவரன் ரூ.440 அதிகரித்து ரூ.47,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிக்க:
ஜியோ 5ஜி வவுச்சர்: புதிய சலுகையாக ரூ.601க்கு ஒரு வருடத்திற்கு வரம்பற்ற 5ஜி டேட்டா!
 

அதேநேரம், வெள்ளி ஒரு கிராம் ரூ.2 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,00,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

.



Source link