இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வீட்டில் நகைகள் திருடப்பட்டுள்ளன. அவர் தற்போது பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டிகளுக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டு நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
கிரிக்கெட் வீரர் வீட்டிலேயே கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பென் ஸ்டோக்ஸிற்கு இங்கிலாந்தின் கேஸ்டில் ஈடன் பகுதியில் வீடு ஒன்று உள்ளது. இங்கு கடந்த 17ஆம் தேதி முகமூடி அணிந்த கொள்ளையர்கள் மாலை நேரத்தில் பென் ஸ்டோக்ஸின் வீட்டிற்குள் புகுந்துள்ளனர்.
பின்னர் அங்கிருந்த நகைகள், விலை மதிப்புள்ள பொருட்கள் உள்ளிட்டவற்றை அவர்கள் அபகரித்து சென்றுள்ளார்கள். அவற்றில் பெரும்பாலான பொருட்கள் பென் ஸ்டோக்ஸிற்கு சென்டிமென்ட் ரீதியாக தொடர்புடையது.
இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். தான் பறிகொடுத்த பொருட்களுக்கு விலை மதிப்பே கிடையாது என்று சமூக வலைதளங்களில் டென் ஸ்டோக்ஸ் தெரிவித்திருக்கிறார். அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் வீட்டிற்குள் இருந்த போது இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
இருப்பினும் முகமூடி கொள்ளையர்கள் பென் ஸ்டோக்ஸின் குடும்பத்தினரை எதுவும் செய்யவில்லை. ஆனாலும் கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் மனரீதியில் பென் ஸ்டாக்சின் குடும்பத்தினரை பாதித்திருக்கிறது. தன்னுடைய நிலைமையை புரிந்து கொள்ள வேண்டும் என்று ஸ்டோக்ஸ் சமூக வலைதளங்களில் குறிப்பிட்டுள்ளார்.
திருடு போன சில பொருட்களின் படங்களை வெளியிட்டுள்ள பென் ஸ்டோக்ஸ் இந்த பொருட்களை யாரும் எளிதாக அடையாளம் காண முடியும் என்றும், அதன் மூலம் தனக்கு உதவுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். விவரம் அறிந்தவர்கள் இங்கிலாந்து காவல்துறையிடம் தகவல் தெரிக்குமாறு பென்ஸ்டோக்ஸ் கோரிக்கை வைத்துள்ளார்.f
மேலும் தான் ஊரில் இல்லாத சூழலில், டெஸ்ட் போட்டிகளுக்காக பாகிஸ்தானில் விளையாடி வரும் நிலையில் தன்னுடைய குடும்பத்தினருக்கு போலீசார் மிகுந்த ஆதரவுடன் இருப்பதாக நன்றி தெரிவித்திருக்கிறார். பென் ஸ்டோக்ஸ் தற்போது வெளியிட்டுள்ள பதிவு எக்ஸ் தளத்தில் 30 லட்சம் பார்வையை கடந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
.