நாவலப்பிட்டி – தொளஸ்பாகே வீதியில் பாரிய மண்மேடு ஒன்றுடன் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதால் அவ்வீதியின் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வீதியின் வெளிகொடவத்தை பகுதியில் இன்று (29) அதிகாலை 2.00 மணியளவில் மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.

அத்துடன், நாவலப்பிட்டியின் பல பகுதிகளில் மரங்கள், மண்மேடு இடிந்து மின்கம்பிகள் மீது விழுந்துள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

The post நாவலப்பிட்டி – தொளஸ்பாகே வீதியில் பாரிய மண்மேடு சரிவு appeared first on Thinakaran.



Source link