கிழக்கு மாகாண மூத்த அரசியல்வாதிகளிலொருவரும் முன்னாள் அமைச்சருமான ‘வேதாந்தி’ சேகு இஸ்ஸதீனின் திடீர் மறைவு, கிழக்கு மாகாணத்துக்கு மாத்திரமன்றி இந்நாட்டு முஸ்லிம் மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகுமென தேசிய ஒருமைப்பாடு பிரதியமைச்சர் முனீர் முழப்பர் தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் தனது செய்தியில், அரசியலினூடாக தான்சார்ந்த சமூகத்துக்காக தன்னை அர்ப்பணித்து செயற்பட்ட ஒருவராகத்தான் நான் வேதாந்தியை பார்க்கின்றேன். சமூகத்தின் எழுச்சிக்காக தனது இறுதி மூச்சுவரை பாடுபட்டதோடு ஒருபோதும் சுயநலத்துக்காக சமூகத்தை காட்டிக்கொடுக்கவில்லை.
சமூகத்தின் குரலாக பாராளுமன்றத்தில் அவர் செயற்பட்ட அந்த நாட்களை நாம் ஒருமுறை மீட்டிப்பார்த்து படிப்பினை பெறவேண்டும். அன்னார் சமூகத்துக்காக மேற்கொண்ட நல்ல பணிகளை வல்ல இறைவன் ஏற்றுக்கொள்ளவேண்டுமென தான் இச்சந்தர்ப்பத்தில் பிரார்த்திப்பதாக பிரதியமைச்சர் முனீர் முழப்பர் தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
The post சேகு இஸ்ஸதீனின் திடீர் மறைவு முஸ்லிம் சமூகத்துக்கு பேரிழப்பு appeared first on Thinakaran.