ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய வீரர் பும்ரா தனது முதலிடத்தை இழந்துள்ளார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில், தென் ஆப்பிரிக்க வீரர் ரபாடா முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ரபாடா 9 விக்கெட்டுகளை கைப்பற்றியது அவர் முதலிடம் பெற காரணமாகியுள்ளது.

கடைசியாக 2019ஆம் ஆண்டு முதலிடத்தில் இருந்த ரபாடா, நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் அதே இடத்தை பிடித்துள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தாத இந்திய வீரர் பும்ரா, தனது முதலிடத்தை இழந்தார்.

விளம்பரம்

இரண்டாவது இடத்தை ஆஸ்திரேலியாவின் ஹேசல்வுட் பெற்றுள்ள நிலையில், பும்ரா மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, நாளை நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது. இதில், பும்ரா பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படலாம் என்றும், அதற்கு பதிலாக ஹர்ஷித் ராணா இந்திய அணியில் இடம்பெறலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

.



Source link