புனேவில் கிரிக்கெட் போட்டியின் போது விளையாடிக்கொண்டிருந்த 35 வயதுடைய இமாம் படேல் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

கடந்த புதன்கிழமை இரவு கார்வேர் மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில், துவக்க வீரராக களமிறங்கினார் இமாம் படேல். சில ஓவர்களை விளையாடிய பிறகு, அவர் நடுவருடம், தனது இடது தோள்பட்டையில் வலி ஏற்படுவதாக தெரிவித்தார். சிறிது நேரம் அவருடன் பேசி மைதானத்தை விட்டு வெளியேறிய போது மயங்கி விழுந்தார்.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த அணியின் மற்ற வீரர்கள், உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

விளம்பரம்
உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்க கறிவேப்பிலையின் 7 ஆரோக்கிய நன்மைகள்.!


உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்க கறிவேப்பிலையின் 7 ஆரோக்கிய நன்மைகள்.!

இதுகுறித்து பேசும்போது, அவரது நண்பரும், அணியின் மற்றொரு வீரருமான நசீர் கான் கூறுகையில், “இதற்கு முன் அவருக்கு இதுபோன்ற எந்த நோயும் இல்லை. அவர் முற்றிலும் ஆரோக்கியமாக இருந்தார். அவர் ஒரு ஆல்-ரவுண்டர் மற்றும் இந்த விளையாட்டு மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார். நாங்கள் இன்னும் அதிர்ச்சியில் இருக்கிறோம். இது எப்படி திடீரென்று நடந்தது என்று புரியவில்லை,” என்று கூறினார்.

படேலுக்கு ஒரு மனைவி மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். அவரது இளைய மகள் பிறந்து 4 மாதங்கள் தான் ஆகிறது. படேலுக்கு மௌலானா ஆசாத் கல்லூரிக்கு அருகே இறுதி சடங்கு செய்யப்பட்டது. அவருக்கு சொந்தமாக ஒரு கிரிக்கெட் அணி இருந்தது. மேலும் அவர் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் சொந்தமாக ஒரு ஜூஸ் கடை வைத்திருந்தார்.

விளம்பரம்
விளம்பரம்

மேலும் அவர் விளையாடிய போட்டி, நேரலை செய்யப்பட்டதால், அவர் மயங்கி விழுந்த காட்சிகள் அனைத்தும் பதிவாகி இருந்தது.

.





Source link