மகளிர் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

அகமதாபாத்தில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது. நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது.

இந்த மூன்று போட்டிகளும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றன. முதல் போட்டியில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்திலும் இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணி 76 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதன் மூலம் தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் இருந்தது.

விளம்பரம்

இந்நிலையில் வெற்றி தொடர் வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி நேற்று இந்திய நேரப்படி மதியம் 1.30 மணி அளவில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.  அந்த அணியில் புரூக் ஹாலிடே 86 ரன்களும், ஜார்ஜியா பிலிம்மர் 39 ரன்களும் எடுத்தனர்.

விக்கெட் கீப்பர் இஸ்பெல்லா கேஸ் 25 ரன்களும், லியா தகுகோ 24 ரன்களும் எடுத்தனர். 49.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து அணி 232 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணியின் வீராங்கனைகள் களம் இறங்கினர்.

தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா 12 ரன்னில் ஆட்டம் இழக்க, ஸ்மிருதி மந்தனாவுடன் இணைந்த யஸ்திகா பாட்டியா சிறப்பாக விளையாடி 35 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். அதன் பின்னர் கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் மற்றும் ஸ்மிருதி மந்தனா இணை மிகவும் பொறுப்பாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி கொண்டு சென்றது.

இதையும் படிங்க – மும்பை டெஸ்டிலிருந்து நியூசிலாந்து பேட்ஸ்மேன் விலகல்… இந்திய அணிக்கு அட்வான்டேஜ் ஆகுமா?

இருவரும் மூன்றாவது விக்கெட் டிற்கு117 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 122 பந்துகள் சந்தித்த ஸ்மிருதி மந்தனா சதம் அடித்து ஆட்டம் இழந்தார். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 59 ரன்களும், ஜெமிமா ரோட்ரிகஸ் 22 ரன்களும் எடுக்க 44.2 ஓவரில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரை ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்திய அணி.

விளம்பரம்

.



Source link