மாவடிப்பள்ளி பாலத்தில் உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்த மத்ரஸா மாணவர்ளுக்கு சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் விசேட துஆப் பிரார்த்தனை நடாத்தப்பட்டது.

இன்று (29)வெள்ளிக்கிழமை குத்பா மற்றும் ஜும்ஆத் தொழுகையை தொடர்ந்து மௌலவி எம்.எம். முபாறக்கினால் இந்த துஆப் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.

சீரற்ற வானிலை காரணமாக கடந்த 26ஆம் திகதி திங்களன்று நிந்தவூர் காஷிபுல் உலூம் அறபுக் கல்லூரிக்கு விடுமுறை வழங்கப்பட்டதையடுத்து சம்மாந்துறை பிரதேசத்தை சேர்ந்த மேற்படி கல்லூரி மாணவர்கள் சிலர்
மாவடிப்பள்ளி பாலத்தின் ஊடாக பயணிப்பதற்காக உழவு இயந்திரமொன்றில் ஏறிச் சென்ற நிலையில் வெள்ளப் பெருக்கு காரணமாக அது கவிழ்ந்து விபத்துக்துக்குள்ளானது.

இதன்போது அதில் பயணித்த அனைவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சில மாணவர்கள் உயிருடன் மீட்கப்பட்ட அதேவேளை எட்டுப் பேர் காணாமல் போயிருந்தனர். அவர்களில் இதுவரை 5 மாணவர்கள் உட்பட 7 பேரின் ஜனாஸாக்கள் மீட்கப்பட்டது. மற்றுமொரு மாணவனை மீட்கும் பணி தொடர்கிறது.

(கல்முனை விசேட நிருபர்)

காரைதீவு விபத்து; அதிபர் மற்றும் ஆசிரியர் விளக்கமறியலில்

The post உயிர் நீத்த மத்ரஸா மாணவர்களுக்கு சாய்ந்தமருதில் துஆப் பிரார்த்தனை appeared first on Thinakaran.



Source link