சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரை பாகிஸ்தானில் நடத்தலாமா அல்லது வேறு இடத்திற்கு மாற்ற முடியுமா என்பது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று முடிவு எடுக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

போட்டி அட்டவணைப்படி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பிப்ரவரி – மார்ச் மாதங்களில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு இருந்தது.  இருப்பினும் பாகிஸ்தானில் நடத்தப்பட்டால் பங்கேற்க மாட்டோம் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தொடர்ந்து ஊக்குவித்து வருவதால் அந்நாட்டுடன் கிரிக்கெட் விளையாடுவதை இந்தியா தவிர்த்து வருகிறது. 2008 இல் நடந்த மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு பின்னர் இந்திய அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் ஏதும் மேற்கொள்ளவில்லை.

விளம்பரம்

பாகிஸ்தானில் நடந்தால் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்க மாட்டோம் என்று இந்தியா அறிவித்துள்ளதால் போட்டி அட்டவணையை இறுதி செய்வதில் ஐசிசி காலம் தாழ்த்தி வருகிறது. இந்தியா தரப்பில் ஹைப்ரிட் முறையில் இந்த போட்டியை நடத்தலாம் என்று ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

அதாவது, இந்தியா விளையாடும் போட்டிகளை பாகிஸ்தான் அல்லாத 3 ஆவது நாட்டில் நடத்தலாம் என்று ஆலோசனை கூறப்பட்டுள்ளது. இதற்கு பாகிஸ்தான் சம்மதிக்கவில்லை.

இதையும் படிங்க – ரவி சாஸ்திரியின் போன் கால்… விதியை தளர்த்திய பிசிசிஐ – விராட் கோலியின் ‘ஃப்ளையிங் கிஸ்’ உருவான கதை!

விளம்பரம்

இந்நிலையில் ஐசிசி கமிட்டி தற்போது கூடி ஆலோசனை நடத்தி வருகிறது. இதில் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நடைபெறும் நாடு தேதி குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

டிசம்பர் 1 ஆம்தேதி ஐசிசி தலைவராக பிசிசிஐ யின் கவுரவ செயலாளர் ஜெய் ஷா பொறுப்பு ஏற்கவுள்ளார். அதற்கு 2 நாட்களுக்கு முன்பாக இந்த முக்கியமான கூட்டம் நடைபெறுகிறது.

.



Source link