இந்தியாவுக்கு எதிரான 3- ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து நியூசிலாந்து அணியின் முக்கிய பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். ஏற்கனவே அவர் காயம் காரணமாக முதல் 2 போட்டிகளில் விளையாடவில்லை.

இந்நிலையில் மூன்றாவது போட்டியில் அவர் விளையாட மாட்டார் என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

விளம்பரம்

கடந்த 12 ஆண்டுகளாக எந்த ஒரு வெளிநாட்டு அணியும் இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றவில்லை. இத்தகைய மிகப்பெரிய சாதனையை இந்திய அணி தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருந்தது. இதனை இந்த முறை நியூசிலாந்து அணி முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. குறிப்பாக நியூசிலாந்து அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் இந்தியா பேட்ஸ்மேன்களை 2 போட்டிகளிலும் திணறடித்து வெற்றியை நியூசிலாந்து வசமாகியுள்ளனர்.

இந்நிலையில் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தீபாவளிக்கு மறுநாளான நவம்பர் 1-ஆம் தேதி மும்பையில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

விளம்பரம்

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த ஆண்டு நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். இந்நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சன் மும்பை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காயம் காரணமாக அவர் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை. இந்நிலையில் கடைசி மேட்சில் அவர் பங்கேற்பார் என்று பரவலாக தகவல்கள் வந்த நிலையில் அவர் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகி உள்ளார்.

விளம்பரம்

இதையும் படிங்க – 13 ஆண்டு பயணம் முடிவுக்கு வந்தது… சர்வதேச போட்டிகளிலிருந்து ஆஸி. வீரர் மேத்யூ வேட் ஓய்வு அறிவிப்பு!

முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ள நிலையில் இந்த போட்டியில் எந்த மாதிரியான வியூகங்களை வகுத்து ரோகித் சர்மா வெற்றியை தேடி தருவார் என்ற எதிர்பார்ப்பு இந்திய அணி ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது. கேன் வில்லியம்சனின் விலகல் இந்திய அணிக்கு பலமாகத்தான் அமையும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

.



Source link