தீபாவளியை முன்னிட்டு கமலஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான படம் அமரன். அதில் நடிகர் சிவகார்த்திகேயன் , சாய்பல்லவி நடித்து பெரிய ஹிட் கொடுத்து இன்றும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இதன் பாக்ஸ் ஆஃபிஷ் கலெக்ஷன் மட்டும் 300 கோடியை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதுதான் இந்த படத்தின் சிறப்பு அம்சம்.
இந்த படத்தை சினிமா பிரபலங்கள் மட்டுமன்றி, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் , நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் என பல அரசியல் தலைவர்களும் பாராட்டு தெரிவித்தனர். அமரன் குறித்து ஜோதிகாவும் தனது இன்ஸ்டாகிராமில் பெரிய பதிவே போட்டிருந்தார். இப்படி தயாரிப்பாளர் எஸ். தாணு, ஞானவேல் ராஜா ஆகியோரும் பாராட்டு தெரிவித்தனர்.
காஷ்மீர் மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாக சில சர்ச்சைகள் எழுந்தாலும் அதையெல்லாம் கடந்து இந்த படம் மாபெரும் வெற்றிப்படமாக உருவாகியுள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் திரை பயணத்தில் இந்த திரைப்படம் ஒரு மயில்கல்லாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
Also Read | நடிகை சமந்தாவுக்கு நிகழ்ந்த அடுத்த பேரிழப்பு.. ஆறுதல் கூறி வரும் பிரபலங்கள்..!
இந்நிலையில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி , நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சில முக்கிய படக்குழுவினருடன் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிக்கை சந்தித்துள்ளனர். சந்திப்பின்போது ராஜ்நாத் சிங், அமரன் படம் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்து பாராட்டியதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.
மேஜர் முகுந்தனின் வாழ்க்கை சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டதால் தேசப்பற்றோடும், அவருக்கு அஞ்சலி செலுத்துவதாகவும் இந்த படம் இருப்பதால் இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக படக்குழு தெரிவித்துள்ளது.
.