இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி விளையாட்டு மூலம் மட்டுமின்றி, விளம்பரம் மற்றும் இதர தொழில்கள் மூலமும் ஆண்டுதோறும் பல கோடி ரூபாய்களை ஈட்டி வருகிறார். அதில் குறிப்பிடத்தக்க அளவுக்கு கிரிக்கெட் மூலம் அவருக்கு வருமானம் கிடைத்து வருகிறது. முக்கியமாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஐபிஎல் தொடர்களில் விளையாடி வருவது மூலமாகவும் ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வருமானத்தை விராட் கோலி ஈட்டி வருகிறார். ஆனால், அந்த இடத்தை தற்போது ரிஷப் பந்த் தட்டிப் பறித்துள்ளார்.

விளம்பரம்

ஆம்! நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் ரிஷப் பந்த் 27 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். அதேபோல், ஸ்ரேயாஸ் ஐயர் ரூ.26.75 கோடி ரூபாய்க்கும், வெங்கடேஷ் ஐயர் 23.75 கோடி ரூபாய்க்கும் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். ஆனால், விராட் கோலியை வெறும் 21 கோடி ரூபாய்க்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தக்க வைத்துள்ளது. அதாவது, விராட் கோலியை விட ரிஷப் பந்த் 6 கோடி ரூபாய் அதிகம் வாங்கவுள்ளார்.

விளம்பரம்
தினமும் வேர்க்கடலை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள்.!


தினமும் வேர்க்கடலை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள்.!

தற்போது ஐபிஎல் வீரர்களின் சம்பளம் உறுதி செய்யப்பட்டிருப்பதால், கிரிக்கெட் வருவாயின் அடிப்படையில், அதிக வருமானம் ஈட்டும் இந்திய கிரிக்கெட் வீரராக ரிஷப் பந்த் உருவெடுத்துள்ளார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அவர், கிரிக்கெட் மூலம் ஆண்டுக்கு ரூ.32 கோடி ரூபாயை வருமானமாக ஈட்டுகிறார். ஆனால், விராட் கோலியின் ஓராண்டின் மொத்த கிரிக்கெட் வருமானம் ரூ.28 கோடி மட்டும்தான்.

அதாவது, பிசிசிஐ ஒப்பந்தத்தில் தற்போது ஏ பிரிவில் இருக்கும் ரிஷப் பந்த்க்கு ஆண்டுக்கு ரூ.5 கோடி சம்பளம் வழங்கப்படுகிறது. மேலும், அவர், ஐபிஎல் ஏலத்தில் ரூ.27 கோடியை உறுதி செய்திருப்பதால், அவரது மொத்த ஆண்டு வருமானம் ரூ.32 கோடி.

விளம்பரம்

அதேபோல், பிசிசிஐ ஒப்பந்தத்தில் தற்போது ஏ+ பிரிவில் இருக்கும் கோலிக்கு ஆண்டுக்கு ரூ.7 கோடி சம்பளம் வழங்கப்படுகிறது. தற்போது, ஆர்சிபி அணி அவரை ரூ.21 கோடிக்கு தக்கவைத்திருப்பதால், அவரது மொத்த கிரிக்கெட் வருமானம் ரூ.28 கோடி.

இதையும் படிங்க:
உங்கள் மொபைல் எப்போதும் புத்தம் புதுசா இருக்கணுமா..? அப்போ இதை தெரிஞ்சிக்கோங்க…

எப்படி இருப்பினும், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் பிசிசிஐ புதிய சம்பள ஒப்பந்தங்களை வெளியிடும். அப்போது ரிஷப் பந்த் ஏ+ பிரிவுக்கு முன்னேற்றப்பட வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில், டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் என மூன்று வடிவங்களிலும் அவர் ஒரு முக்கிய வீரராக உருவெடுத்துள்ளார். அதே சமயத்தில் தற்போது இந்திய டி20 அணியில் இடம்பெறாத கோலி, புதிய ஊதிய ஒப்பந்தத்தில் ஏ பிரிவுக்கு இறக்கப்படலாம். அப்போது அவருக்கான சம்பளம் இன்னும் குறைக்கப்படும். இதன்படி, கிரிக்கெட் வருமானத்தில் முதலிடத்தில் இருக்கும் ரிஷப் பந்த் தொடர்ந்து அதே இடத்திலேயே நீடிக்க சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.

விளம்பரம்

மற்றொரு புறம் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகையை ஈட்டினாலும், பிசிசிஐ ஒப்பந்தத்தில் அவர்கள் இல்லை. எனவே அவர்கள் கோலியுடன் போட்டியிட முடியாது. ஒருவேளை ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணிக்கு திரும்பினால், கோலியை முந்துவதற்கு வாய்ப்பு உள்ளது.

.



Source link