விராட் கோலி தன்னை இன்ஸ்டாகிராமில் பிளாக் செய்ததாகவும், பின்னர் ஆர்.சி.பியில் சேர்ந்த பின்னர் தாங்கள் நல்ல நண்பர்களாகிவிட்டதாகவும் மேக்ஸ்வெல் சமீபத்தில் கூறியுள்ளார்.

2020-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக மோசமாக விளையாடிய மேக்ஸ்வெல், 2021-ம் ஆண்டு ஆர்சிபி அணிக்கு ரூ.14.25 கோடிக்கு ஏலம் போனார். இதில் விராட் கோலியின் முயற்சி அதிகமாக இருந்தது. அதன்பின்னர், மேக்ஸ்வெல் அந்த சீசனில் 15 போட்டிகளில் 513 ரன்கள் குவித்து அசத்தினார்.

கடந்த 4 ஆண்டுகளில் கோலி மற்றும் மேக்ஸ்வெல் நல்ல நண்பர்களாகிவிட்டனர். ஆனால் அதற்கு முன்னர் விராட் கோலி, தன்னை இன்ஸ்டாகிராமில் பிளாக் செய்ததாக மேக்ஸ்வெல் சமீபத்தில் கூறியுள்ளார்.

விளம்பரம்

இதையும் படிக்க:
“உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுங்க விராட் கோலி…” முன்னாள் வீரர் அட்வைஸ்

இதுகுறித்து லிஸ்ட்னர் ஸ்போர்ட்ஸ் பாட்காஸ்டில் பேசிய மேக்ஸ்வெல், “நான் ஆர்சிபி அணிக்கு வரப்போவதாக தெரிந்ததும், கோலிதான் முதலில் எனக்கு வாழ்த்து கூறினார். ஐபிஎல் பயிற்சி முகாமுக்கு சென்றபோது, நாங்கள் நிறைய பேசிக் கொண்டோம். பின்னர் அவரை இன்ஸ்டாகிராமில் பின்பற்ற முயற்சித்தேன். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் என்னை பிளாக் செய்திருக்கலாம் என்று யாரோ சொன்னார்கள். அதுதான் அவரை கண்டுபிடிக்க முடியாத காரணம்.

விளம்பரம்

இதையடுத்து ‘நீங்கள் என்னை இன்ஸ்டாகிராமில் பிளாக் செய்துவிட்டீர்களா?’ என்று அவரிடம் நேரடியாக கேட்டேன். அவரும், ‘ஆமாம், நீங்கள் என் காயத்தை கிண்டல் செய்தபோது பிளாக் செய்துவிட்டேன்’ என்றார். அதற்கு நான், ‘சரிதான்’ என்றேன். பின்னர் அவர் என்னை அன்பிளாக் செய்துவிட்டார். நாங்கள் நல்ல நண்பர்களானோம்” என்று கூறினார்.

வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்.!


வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்.!

கடந்த 2017-ம் ஆண்டு ராஞ்சியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் கோலி தோள்பட்டை காயம் அடைந்தது. இரண்டாவது நாள் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தபோது, மேக்ஸ்வெல் கோலியின் காயத்தை கிண்டல் செய்தார். இதனால் கோலி கோபமடைந்து மேக்ஸ்வெல்லை பிளாக் செய்துள்ளார்.

விளம்பரம்

.



Source link