பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்து கேரி கிர்ஸ்டன் பதவி விலகிய நிலையில், ஜேசன் கில்லஸ்பிக்கு கூடுதல் பொறுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு முகமது ரிஸ்வான் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் முதல், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளுக்கான பயிற்சியாளராக இருந்த கேரி கிர்ஸ்டன் பதவி விலகுவதாக அறிவித்தார்.

கேரி கிர்ஸ்டனுக்கு அணி நிர்வாகம் ஒத்துழைக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவரது ராஜினாமாவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொண்டது.

விளம்பரம்

என்ன பிரச்சினை?: கடந்த ஏப்ரல் 2024-ல் பாகிஸ்தான் அணியின் வெள்ளைப்பந்து கிரிக்கெட் தலைமைப் பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன் நியமிக்கப்பட்டார். அவரது பயிற்சியின் கீழ், வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையின் போது பாகிஸ்தான் அணி குரூப் ஸ்டேஜை கூடத் தாண்டவில்லை. இது கடும் விமர்சனத்தை சந்திக்க வைத்தது.

இதனை தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கும் கேரி கிர்ஸ்டனுக்கும் மோதல்கள் தொடங்கின. இதற்கு காரணம், அணி தேர்வுகளில் கேரி கிர்ஸ்டனால் பரிந்துரை செய்ய முடியவில்லை. அனைத்து முடிவுகளுமே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மேற்கொண்டுவந்தது. அது வீரர்கள் தேர்விலும் நடந்தது. இதனால், கேரி கிர்ஸ்டன் பரிந்துரைக்கும் வீரர்கள் அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை.

விளம்பரம்

வீரர்கள் மட்டுமல்ல, அணியின் உதவியாளர்கள் கூட கேரி கிர்ஸ்டன் பரிந்துரைக்கும் நபருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. டேவிட் ரீட் என்பவரை ஹை பெர்பார்மன்ஸ் கோச் ஆக நியமிக்க கேரி கிர்ஸ்டன் பலமுறை வலியுறுத்தியும் பிசிபி நடவடிக்கை எடுக்கவேயில்லை. போதாக்குறைக்கு பாகிஸ்தான் வீரர்கள் கிர்ஸ்டன் பேச்சுக்கு கீழ்படிவதில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவியது.

பந்துவீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடி, கேரி கிர்ஸ்டன் உடன் மோதல் போக்கில் ஈடுபட்டார் எனக் கூறப்பட்டது. இந்த காரணங்களால் கேரி கிர்ஸ்டன் பதவி விலகினார் என சொல்லப்படுகிறது.

விளம்பரம்

Also Read |
விளையாட்டு வீரர்கள் பபுள் கம் மெல்வது ஏன்? இப்படி ஒரு காரணம் இருக்கிறதா?

ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் வெற்றிகரமான பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன். 2011-ல் இந்தியா உலகக் கோப்பையை வென்றபோது கேரி கிர்ஸ்டன் தான் பயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படிப்பட்டவர் தற்போது ஒரு போட்டியில் கூட பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக இல்லாமல் விலகியுள்ளது கிரிக்கெட் உலகில் பேசுபொருளாகி உள்ளது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக ஜேசன் கில்லஸ்பி நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே, பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக உள்ள ஜேசன் கில்லஸ்பி, இருப்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

.



Source link