ஹால்டி விழாவையொட்டி சோபிதா முழு கை ரவிக்கையுடன் பிரகாசமான சிவப்பு நிற புடவை அணிந்திருந்தார். மறுபுறம், நாக சைதன்யா எப்போதும் போல் குர்தா பைஜாமா உடையில் வசீகரமாக காட்சியளித்தார்.
நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா திருமணம் டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஜோடி ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டூடியோவில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். தம்பதிகள் தங்கள் திருமண நாளுக்குத் தயாராகும் நிலையில், அவர்களது திருமணம் பாரம்பரியமான முறையில் நடைபெற இருக்கிறது என்பதை இந்த சடங்குகள் தெளிவாக்கியுள்ளன.
Naga chaitanya, Shobitha’s Mangalasnanam#Chayso #NagaChaithanya #shobitadhulipala @TrendsChaitu pic.twitter.com/nTYVScRPTl
— Phani Kumar (@phanikumar2809) November 29, 2024
தெலுங்கு பிராமண முறைப்படி 8 மணி நேரத்துக்கும் மேலாக இந்த திருமண சடங்குகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அண்மையில் நாக சைதன்யாவின் தந்தை நாகார்ஜுனாவும் தனது மகனின் திருமணம் குறித்த விவரங்களை ஜூம் நிறுவனத்திடம் தெரிவித்து, டிசம்பர் 4 ஆம் தேதியன்று தனது தந்தை கட்டிய குடும்ப ஸ்டுடியோவான அன்னபூர்ணா ஸ்டுடியோவில் திருமணத்தை நடத்த இருப்பதாக தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க:
ஓடிடியில் வரிசை கட்டும் ஹிட் படங்கள்… இந்த வாரம் பார்க்க மறக்காதீங்க…
மேலும், “நாங்கள் இந்த திருமணத்தை ஒரு நெருக்கமான விழாவாக கொண்டாட திட்டமிட்டோம், ஆனால் விருந்தினர் பட்டியலைக் குறைப்பதன் மூலம் கூட, மிகப் பெரிய வருகையை எதிர்பார்க்கிறோம். எங்களுக்கு ஒரு பெரிய குடும்பம் உள்ளது, சோபிதாவுக்கும் பெரிய குடும்பம் உள்ளது. எனவே, விரிவான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்” ஜூம் நிறுவனத்திடம் நாகார்ஜுனா கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
.