இன்றைய டிஜிட்டல் யுகத்தில் கண்ணுக்குத் தெரியாமல் எங்கோ ஓரிடத்தில் இருந்து ஆன்லைன் மூலமாகவும் செல்போனை பயன்படுத்தியும் மற்றவர்களின் பணத்தை மோசடி செய்து திருடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் வயதான முதியவர்கள் ஆகியோர்களை குறிவைத்து இதுபோன்ற தாக்குதல்களை ஆன்லைன் மோசடிக்காரர்கள் நடத்தி வருகிறார்கள்.

இவ்வாறு மோசடிகளை மேற்கொள்வதற்கு சில குறிப்பிட்ட வழிமுறைகளை அவர்கள் பின்பற்றுகிறார்கள். அவற்றை நாம் முன்னரே தெரிந்து வைத்திருந்தால் இது போன்ற மோசடிகள் நம்மை நெருங்கும் போது எளிதாக அதிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். மோசடிக்காரர்கள் பயன்படுத்தும் 10 பொதுவான வழிமுறைகளைப் பற்றி இப்போது பார்ப்போம்

விளம்பரம்

ட்ராய் போன் மோசடி: மோசடிக்காரர்கள் தங்கள் குறிவைத்த நபருக்கு கால் செய்து தங்கள் ட்ராயிலிருந்து கால் செய்வதாகவும் உங்களது மொபைல் எண் சில தவறான காரியங்களுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் அவர்கள் கூறுவதை செய்யவில்லை எனில் உங்களது செல் நம்பரை சஸ்பெண்ட் செய்து விடுவதாகவும் மிரட்டுவார்கள். ஆனால் உண்மையிலேயே ட்ராய் எப்போதும் ஒரு இணைப்பை சஸ்பெண்ட் செய்வது கிடையாது. அது டெலிகாம் நிறுவனங்களின் வேலை ஆகும்.

இதையும் படிக்க:
ஜியோ ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி டபுள் ஜாக்பாட்! – வெளியான அதிரடி அறிவிப்பு

பார்சல் கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்டது: குறி வைத்த நபருக்கு கால் செய்யும் மோசடிக்காரர்கள் நீங்கள் கடத்தல் வேலையை செய்ததாகவும், உங்களது பார்சல் கஸ்டம்ஸ் அதிகாரியிடம் மாட்டிக் கொண்டதாகவும் கூறி பயமுறுத்துவார்கள். பிறகு அதிலிருந்து தப்பிப்பதற்கு உங்களிடம் பணம் கேட்பார்கள். இது போன்ற கால் வந்தால் உடனடியாக அந்த இணைப்பைத் துண்டித்து அந்த எண்ணை பற்றி சைபர் கிரைமிற்கு புகார் தெரிவிக்கவும்.

டிஜிட்டல் கைது: தங்களை காவல்துறை அதிகாரிகளாக கூறி கால் செய்யும் மோசடிக்காரர்கள், ஆன்லைன் மூலமாக உங்களை கைது செய்துள்ளதாகவும் அல்லது விசாரணை செய்யப்போவதாகவும் கூறுவார்கள். உண்மையிலேயே எந்த ஒரு காவல்துறையும் ஆன்லைன் மூலம் விசாரணையோ அல்லது கைதையோ மேற்கொள்ளாது.

விளம்பரம்
ஒவ்வொரு படத்திலும் தனது தோற்றத்தால் ரசிகர்களை மிரள வைத்த ‘சியான்’ விக்ரம்.!


ஒவ்வொரு படத்திலும் தனது தோற்றத்தால் ரசிகர்களை மிரள வைத்த ‘சியான்’ விக்ரம்.!

குடும்பத்தினர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறுவார்கள்: சில மோசடிக்காரர்கள் தாங்கள் குறி வைத்த நபர்களுக்கு போன் செய்து தங்கள் குடும்பத்தில் உள்ள உறுப்பினர் ஒருவரின் பெயரை கூறி அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறுவார்கள். மேலும் அவரை விடுவிப்பதற்கு குறிப்பிட்ட தொகையை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும் என்றும் கூறுவார்கள். இவ்வாறு கால் வந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட குடும்ப உறுப்பினரை தொடர்பு கொள்ளவும். தொடர்பு கொண்டு உண்மை நிலையை அறிந்து அதற்கு ஏற்றபடி செயல்படவும்.

விளம்பரம்

டிரேடிங்: சில சமூக வலைத்தளங்களில் காண்பிக்கப்படும் விளம்பரங்கள் குறிப்பிட்ட முதலீடுகளுக்கு அதிக லாபம் கிடைப்பதாக ஆசை வார்த்தை கூறுவார்கள். பொதுவாக இதுபோல குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் என கூறப்படும் திட்டங்கள் அனைத்தும் மோசடிகளாகவே இருக்கும்.

எளிமையான வேலைக்கு அதிக பணம்: இன்றைய நிலையில் இது சர்வசாதாரணமாக நடக்கும் மோசடியாகும். எளிமையாக பணம் சம்பாதிக்க ஆசைப்படும் நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு கால் செய்து எளிமையான வேலைக்கு அதிக பணம் தருவதாக கூறி, அவர்களை முதலீடு செய்ய வைப்பார்கள். இதுபோன்ற கால்கள் பெரும்பாலும் மோசடியாகவே இருக்கும்.

விளம்பரம்

கிரெடிட்கார்ட் மோசடி: மோசடிக்காரர்கள் வங்கியில் இருந்து கால் செய்வது போல் நடித்து உங்களது கிரெடிட் கார்டில் அதிக அளவு தொகை பண பரிமாற்றம் நடந்துள்ளதாக கூறுவார்கள் அல்லது உங்களது பெயரில் கிரெடிட் கார்டு அப்ளை செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்காக ஓடிபி நம்பரை கூறுமாறும் அவர்கள் கூறுவார்கள். இது போன்ற சமயத்தில் உங்களது வங்கியை நேரடியாக தொடர்பு கொண்டு தகவலை உறுதி செய்து கொள்ளவும். பெரும்பாலும் இவை மோசடியாகவே இருக்கும்.

எடை இழப்புக்கான உங்களின் கடைசி உணவை எப்போது சாப்பிட வேண்டும்.?


எடை இழப்புக்கான உங்களின் கடைசி உணவை எப்போது சாப்பிட வேண்டும்.?

தவறுதலான பணப்பரிமாற்றம்: சில மோசடிக்காரர்கள் தங்கள் குறிவைத்த நபருக்கு கால் செய்து தெரியாமல் தங்களது கணக்கிலிருந்து உங்களது வங்கி கணக்கிற்கு பண பரிமாற்றத்தை மேற்கொண்டதாகவும், குறிப்பிட்ட தொகையை கூறி அதனை திரும்ப செலுத்துமாறும் உங்களை வற்புறுத்துவார்கள். இது போன்ற கால் வந்தால் உடனடியாக உங்களது வங்கியை தொடர்பு கொண்டு உண்மை நிலையை தெரிந்து கொள்ளவும்.

விளம்பரம்

கேஒய்சி புதுபித்தல்: மோசடிக்காரர்கள் உங்களுக்கு கால் செய்து உங்களது வங்கியின் கேஒய்சி காலம் முடிவடைந்து விட்டதாகவும், அதனை புதுப்பிக்க வேண்டும் என்று கூறி உங்களது தனிப்பட்ட தகவல்களை உங்களிடம் இருந்து கேட்டு பெற முயற்சிப்பார்கள். இவை பெரும்பாலும் போலியானதாகவே இருக்கும். எனவே உங்களது வங்கியை நேரடியாக தொடர்பு கொண்டு தகவல்களை உறுதி செய்து கொண்டு அதன்பின் செயலாற்றவும்.

போலி வருமான வரித்துறை அதிகாரிகள்: சில மோசடிக்காரர்கள் அவர்களை வருமானவரித்துறை அதிகாரிகள் என்றும் உங்களது வங்கிக் கணக்கை சோதனை செய்வதற்காக உங்களது வங்கி விவரங்களை அளிக்குமாறு உங்களை வற்புறுத்துவார்கள் இவை கண்டிப்பாக போலியான கால்களாகவே இருக்கும். ஏனெனில் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் உங்களது வங்கி கணக்கு பற்றிய விவரங்கள் ஏற்கனவே இருக்கும். மேலும் அவர்கள் உங்களை நேரடியாக தொடர்பு கொள்வார்கள் என்பதை மறக்க வேண்டாம்.

.



Source link