இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் மற்றும் அவரது மனை சாய்ரா பானு ஆகியோர் பரஸ்பரம் பிரிவதாக அறிவித்துள்ள நிலையில், ஏ.ஆர்.ரகுமானுக்கு சொந்தமான சுமார் ரூ. 1500 கோடி மதிப்புள்ள சொத்துக்களின் நிலைமை குறித்து வலைதளங்களில் யூகங்கள் எழுந்துள்ளன.

29 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்த ஏ.ஆர். ரகுமான் மற்றும் சாய்ரா பானு ஜோடி பரஸ்பரம் பிரிவதாக நேற்று அறிவித்தனர்.இது தொடர்பாக சாய்ரா பானு தரப்பிலிருந்து வெளிவந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  நீண்ட ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்த இந்த ஜோடி ரோல் மாடலாக பலரால் கருதப்பட்டு வந்தது. இதனால் சாய்ரா பானு தரப்பிலிருந்து வந்த அறிவிப்பு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விளம்பரம்

Also Read: 
ஆடம்பர பங்களா முதல் கார்கள் வரை… இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் நிகர மதிப்பு எவ்வளவு தெரியுமா?

முதலில் இது உண்மைதானா என ரகுமானின் ரசிகர்கள் பலர் சந்தேகம் தெரிவித்திருந்தனர். அடுத்த சில நிமிடங்களில் சாய்ரா பானு தனது வழக்கறிஞர் மூலமாக விவாகரத்து தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது உறுதிப்படுத்தப்பட்டது. தங்களுக்கு இடையே நிரப்பு முடியாத அளவுக்கு இடைவெளி ஏற்பட்டுள்ளதாகவும், இதனை யாராலும் தீர்க்க முடியாது என்றும் சாய்ரா பானு தனது விவாகரத்து தொடர்பான அறிவிப்பில் கூறியுள்ளார்.

மேலும் தங்களது தனி உரிமைக்கு அனைவரும் மதிப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். சாய்ரா பானுவை தொடர்ந்து ஏ.ஆர். ரகுமானும் தனது சமூக வலைதள பக்கங்களில் தனது கருத்தை பதிவிட்டிருந்தார். தங்களது திருமண வாழ்வு 30 வயதை எட்டும் என்று நம்பியதாகவும் ஆனால் எல்லாமே கண்ணுக்குத் தெரியாத முடிவாக தெரிவதாக ரகுமான் கூறியுள்ளார்.

பிரிவுக்கு பின்னர் மனைவிக்கு ஜீவனாம்சம் உள்பட சொத்துக்களை பகிர்ந்தளிக்க வேண்டிய நிலை ஏ.ஆர். ரகுமானுக்கு ஏற்படும். ரகுமானுடைய சொத்து  மதிப்பு ரூ. 1700 கோடி முதல் ரூ. 2000 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

விளம்பரம்

இந்தியாவின் மிகவும் பணக்கார இசையமைப்பாளராக ஏ.ஆர். ரகுமான் இருந்து வருகிறார். ஒவ்வொரு படத்திற்கும் அவர் சுமார் 10 கோடி ரூபாய் வரையில் சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது. சர்வதேச அளவில் இசை நிகழ்ச்சிகளை நடத்துவது உட்பட பல்வேறு தளங்களில் இருந்து ரகுமானுக்கு வருவாய் கிடைக்கிறது.

இதையும் படிங்க – காதலுக்காக ஆஸ்திரேலியாவில் இருந்து சீனாவுக்கு பயணம் செய்யும் மாணவர்..!

2 ஆஸ்கர் விருதுகளை வென்றதுடன், தேசிய விருதுகள், கிராமி விருது, பத்ம பூஷன் விருது உள்ளிட்ட பலவற்றை பெற்றிருக்கிறார்.

விளம்பரம்

ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரது மனைவி ஆகியோர் பரஸ்பரம் பிரிவதாக அறிவித்துள்ள நிலையில் ரஹ்மானின் சொத்து அவரது மனைவிக்கு பகிர்ந்து அளிக்கப்படுமா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளிவரவில்லை.

.



Source link