தடையில்லா சான்றிதழ் வழங்கியவர்களுக்கு நன்றி நன்றி தெரிவித்து நடிகை நயன்தாரா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாராவும், பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். சென்னை அருகே மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில் பிரமாண்டமாக நடந்த திருமணத்தில் முக்கியமான திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

திருமணத்தின்போது அது குறித்து வீடியோ வெளியாகாத நிலையில், திருமண நிகழ்வுடன் சேர்த்து, நயன்தாரா – விக்னேஷ் சிவனின் காதல் வாழ்க்கை, ‘‘Nayanthara: Beyond the Fairytale’’ என்ற பெயரில் ஆவணப்படமாக தயாரானது. 2 ஆண்டுகளுக்கு மேலாக இந்த ஆவணப்படம் வெளியாகாததற்கு, ‘‘நானும் ரவுடிதான்’’ படத்தின் காட்சிகளை பயன்படுத்த, அந்த படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான தனுஷ் அனுமதிக்கவில்லை என நயன்தாரா குற்றம் சாட்டியிருந்தார்.

விளம்பரம்

மேலும், டிரைலரில் 3 நொடி காட்சியை பயன்படுத்தியதற்கு தனுஷ் 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்த நயன்தாரா, தனுஷை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த விவகாரத்தில் தனுஷ் மற்றும் நயன்தாரா இருவருக்கும் ஆதரவாக பல்வேறு தரப்பினர் கருத்துக்களை பதிவிட்டிருந்தனர்.

News18

இந்நிலையில், நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் நயன்தாராவின் கல்யாண வீடியோ வெளியானது. இதைப் பார்த்த ரசிகர்கள் #NayantharaBeyondTheFairytale என்ற ஹேஷ்டேக்கின் கீழ் கருத்துக்களை கூறி வந்தனர். குறிப்பாக எக்ஸ் தளத்தின் Netflix India கணக்கிலிருந்து நயன்தாராவின் கல்யாண வீடியோ பகிரப்பட்டுள்ளது. இதில் நெட்சன்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இந்த ஆவணப்படத்தில் இயக்குநர் அட்லீ, விஷ்ணு வரதன், நெல்சன் மற்றும் நடிகை ராதிகா சரத்குமார் , நடிகர் நாகர்ஜுனா உள்ளிட்ட பலரின் பேட்டிகளும் அடங்கியிருக்கிறது. Nayanthara: Beyond the Fairytale’ தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் நயன்தாரா அந்த ஆவணப்படத்தில் இடம்பெற்ற படக்காட்சிகளின் தயாரிப்பாளர்களைக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

விளம்பரம்

News18

அதில், “நமது Nayanthara: Beyond the Fairy Tale’ ஆவணப்படம் வெளியாகி இருக்கிறது. பல்வேறு மகிழ்வான தருணங்கள் அடங்கிய எனது திரைப் பயணத்தில், நாம் இணைந்து பணியாற்றிய திரைப்படங்கள் மிகவும் இன்றியமையாதது. அதனால், அந்த படங்கள் குறித்த நினைவுகளும், ஆவணப்படத்தில் இடம்பெற வேண்டும் என உங்களை அணுகியபோது எந்தவித தயக்கமோ, தாமதமோ இல்லாமல் தடையில்லா சான்றிதழ் வழங்கிய அந்த பேரன்பை என்றென்றும் நன்றியோடு நினைவில் வைத்துக் கொள்வேன். என்று தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விளம்பரம்

.



Source link