நாட்டில் பண்டிகை சீசன் களை கட்டியுள்ள நிலையில் தீபாவளியை முன்னிட்டு பிரபல கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனமான ஒன்பிளஸ் தனது தயாரிப்புகளுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. ஸ்மார்ட் ஃபோன்கள், டேப்லெட்ஸ், ஸ்மார்ட் வாட்ச்கள் மற்றும் இயர்பட்ஸ் போன்ற தனது பல தயாரிப்புகளுக்கு இந்த சிறப்பு விற்பனையில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விற்பனை தற்போது லைவில் உள்ளது மற்றும் நவம்பர் 5 வரை இருக்கும். நிறுவனத்தின் பிரபல மாடல்களான OnePlus Nord 4, OnePlus Nord CE 4 மற்றும் OnePlus 12R உள்ளிட்டவை தற்போது தள்ளுபடி விலைகளுடன் பட்டியலிடப்பட்டுள்ளன. விலை குறைப்பை தவிர ஒன்பிளஸ் டிவைஸ்களை நோ-காஸ்ட் EMI ஆப்ஷன் மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட்ஸ் மூலமும் வாங்கலாம்.

விளம்பரம்

இந்தியாவில் ஒன்பிளஸின் தீபாவளி விற்பனை…

நிறுவனம் ‘MakeitSpecial’ என்ற பெயரில் தீபாவளி சிறப்பு விற்பனையை வழங்கி வருகிறது. இந்த விற்பனையின் ஒரு பகுதியாக, ஒன்பிளஸ் தயாரிப்புகளை ஒன்பிளஸ் இந்தியா வெப்சைட் ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்ஸ் மற்றும் அமேசான் ஆகியவற்றில் இருந்து தள்ளுபடி விலையில் வாங்கலாம். இந்த சிறப்பு விற்பனை நவம்பர் 5ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் ரிலையன்ஸ் டிஜிட்டல், பஜாஜ் எலெக்ட்ரானிக்ஸ், குரோமா, விஜய் சேல்ஸ், பூர்விகா, சங்கீதா மொபைல்ஸ், பை எலக்ட்ரானிக்ஸ், பிக் சி மொபைல்ஸ் மற்றும் லாட் மொபைல்ஸ் போன்ற ஆஃப்லைன் ஸ்டோர்களில் இருந்து ஒன்பிளஸ் டிவைஸ்களை வாங்கும்போதும் இந்த தள்ளுபடியைப் பெறலாம்.

விளம்பரம்

OnePlus Nord 4-ன் ஒரிஜினல் விலை ரூ.29,999-ஆகி இருக்கும் நிலையில் இந்த சிறப்பு விற்பனையில் ரூ.2,000 உட்படபேங்க் டிஸ்கவுன்ட் உட்பட ரூ.25,999-க்கு வாங்கலாம். மேலும் குறிப்பிட்ட பேங்க் கார்டுகளுக்கு 9 மாதங்கள் வரை நோ-காஸ்ட் EMI ஆப்ஷன்களும்கிடைக்கும். அதே போல் Snapdragon 7 Gen 3 SoC-ப்ராசஸரில் இயங்கும் OnePlus Nord CE 4 மொபைலின் ஒரிஜினல் விலை ரூ.24,999ஆக உள்ள நிலையில் ரூ.1,500 பேங்க் டிஸ்கவுன்ட் உட்பட தற்போது ரூ.20,999-க்கு கிடைக்கிறது. நடந்து வரும் தீபாவளி சிறப்பு விற்பனையில், OnePlus 12R மொபைலின் பேஸ் வேரியன்ட்டை ரூ.4,000 பிளாட் ஆஃப்ர் மற்றும் ரூ.3,000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட்டை பயன்படுத்தி ரூ.32,999க்கு வாங்கலாம். 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் கொண்ட இந்த வேரியன்ட்டின் அறிமுக விலை ரூ.39,999 ஆகும்.

விளம்பரம்

இதையும் படிக்க:
லாஜிடெக் POP ஐகான் கீஸ் காம்போ இந்தியாவில் அறிமுகம்.. இதன் விலை எவ்வளவு தெரியுமா?

மேலும் OnePlus Pad Go அறிமுக விலை ரூ.19,999-க்கு பதிலாக தற்போது ரூ.14,999-க்கு கிடைக்கிறது. OnePlus Nord Buds 3 மற்றும் Nord Buds 3 Pro ஆகியவை முறையே ரூ.2,099 மற்றும் ரூ.2,499க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல OnePlus Watch 2Rஆனது ரூ.17,999க்கு பதிலாக ரூ.12,999 என்ற விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. OnePlus 12, OnePlus Pad மற்றும் OnePlus Watch 2 ஆகியவை இந்த விற்பனையின்போது தள்ளுபடியில் கிடைக்கின்றன. இவை ரூ.54,999, ரூ33,999, மற்றும் ரூ.16,999 என்ற ஆரம்ப விலையில் வாங்க கிடைக்கின்றன.

விளம்பரம்

.



Source link