சூர்யா 44 படத்தில் 19 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் சூர்யாவுடன் பிரபல நடிகை இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்டுடியோ கிரீன் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில், இயக்குனர் சிவா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் கடந்த வியாழக்கிழமை வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் கலவை விமர்சனங்களை பெற்றது. கலவை விமர்சனங்கள் வெளிவந்த போதிலும் கங்குவா திரைப்படம் தொடர்ந்து வசூலை குவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விளம்பரம்

இந்நிலையில், இப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா தனது 44 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இன்னும் தலைப்பு வெளியாகாத நிலையில், சூர்யா 44 என்று தற்போது பெயரிடப்பட்டுள்ளது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் இப்படத்தில், சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க : soodhu kavvum 2: சூது கவ்வும் 2 ஆம் பாகம் எப்போது ரிலீஸ்..? படக்குழு வெளியிட்டுள்ள வித்தியாசமான புரோமோ!

விளம்பரம்

இதனைத்தொடர்ந்து நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் திரைப்படம் சூர்யா 45. இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த நிலையில், இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சூர்யாவின் 45வது படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கப்போவதாக கூறப்படுகிறது.

திருமண சீசனுக்கான நயன்தாராவின் 5 புடவை கலெக்ஷன்ஸ்.!


திருமண சீசனுக்கான நயன்தாராவின் 5 புடவை கலெக்ஷன்ஸ்.!

நடிகை த்ரிஷா – சூர்யா இருவரும் இணைந்து மௌனம் பேசியதே மற்றும் ஆறு ஆகிய படங்களில் நடித்துள்ளனர். மேலும் மன்மதன் அம்பு படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு த்ரிஷாவுடன் சூர்யா நடனமாடி இருந்தார். மேலும் ஆர்.ஜே. பாலாஜி இயக்கவுள்ள மாசாணி அம்மன் படத்திலும் த்ரிஷா தான் நடிக்கவிருந்தார் என தகவல் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 19 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா – த்ரிஷா ஜோடி இந்த படத்தில் இணைந்திருப்பது ரசிகர்களை மகிழ்ச்சிடைய செய்துள்ளது.

விளம்பரம்

.



Source link