மோட்டோரோலா நிறுவனத்தின் எட்ஜ் 50 ப்ரோ(Edge 50 Pro) ஸ்மார்ட் ஃபோன் ரூ.35,000-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த டிவைஸ்களில் ஒன்றாகும். இந்த பண்டிகை சீசன் ஸ்பெஷல் விற்பனையில் இந்த மொபைல் தற்போது முன்பை விட குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
Big Billion Days விற்பனை நடைபெற்றுவரும் நிலையில் Motorola Edge 50 Pro மொபைலுக்கு Flipkart-ல் தற்போது ரூ.6,000 வரை பெரும் தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. நீங்கள் மோட்டோரோலாவின் Edge 50 Pro ஃபோனை வாங்க திட்டமிட்டிருந்தால், டீல் விவரங்களைப் பற்றி அறிய தொடர்ந்து படிக்கவும்.
ஃபிளிப்கார்ட்டில் மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ மொபைலுக்கு வழங்கப்படும் சலுகை: மோட்டோரோலா நிறுவனத்தின் Edge 50 Pro மொபைலானது நடப்பு Flipkart Big Billion Days விற்பனையின் போது ரூ.29,999 என்ற தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த விலை Edge 50 Pro-வின் 256GB ஸ்டோரேஜ் + 12GB ரேம் வேரியன்ட்டிற்கானது. இந்த மாடல் இந்தியாவில் ரூ.35,999-க்கு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் யூஸர்கள் இந்த சிறப்பு விற்பனையின் போது ரூ.6,000 பிளாட் டிஸ்கவுன்ட் பெறுகிறார்கள். இந்த மொபைலின் அம்சங்கள் மற்றும் ஸ்பெசிஃபிகேஷன்கள் பற்றி கீழே பார்க்கலாம்.
மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ அம்சங்கள்: இந்த மொபைல் 6.7-இன்ச் 1.5K pOLED டிஸ்ப்ளே மற்றும் ட்ரூ கலர் பான்டோன் வேலிடேட்டட் சர்டிஃபிகேஷனை கொண்டுள்ளது. இதன் பேனல் HDR10+, 144Hz ரெஃப்ரஷ் ரேட் மற்றும் 2,000nits வரையிலான பீக் பிரைட்னஸ் சப்போர்ட்டை கொண்டுள்ளது. இந்த மொபைலில் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 ப்ராசஸர் கொடுக்கப்பட்டுள்ளது. இது 12GB ரேம் மற்றும் 256GB இன்டர்னல் ஸ்டொரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க:
லாஜிடெக் POP ஐகான் கீஸ் காம்போ இந்தியாவில் அறிமுகம்.. இதன் விலை எவ்வளவு தெரியுமா?
இந்த மொபைலின் பின்பக்கம் டிரிபிள் ரியர் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஆல்-பிக்சல் ஃபோகஸ் மற்றும் OIS சப்போர்ட்டுடன் கூடிய 50MP பிரைமரி கேமரா, 13MP அல்ட்ரா-வைட் + மேக்ரோ விஷன் சென்சார் மற்றும் OIS சப்போர்ட்டுடன் 10MP டெலிஃபோட்டோ கேமராவும் அடக்கம்.
செல்ஃபிக்கள் மற்றும் வீடியோ கால்ஸ்களுக்காக இந்த மொபைலின் முன்பக்கத்தில் ஹை-ரெசல்யூஷன் செல்ஃபிக்களுக்கான குவாட் பிக்சல் டெக்னலாஜியுடன் கூடிய 50MP சென்சார் உள்ளது. இந்த மொபைல் 4,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 125W டர்போபவர் சார்ஜிங்கிற்கான சப்போர்ட்டை வழங்குகிறது, மேலும் நிறுவனம் 50W வரையிலான வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பம் மற்றும் 10W வயர்லெஸ் பவர் ஷரிங் சப்போர்ட்டையும் வழங்கியுள்ளது.
அதே போல இந்த மொபைலில் AI ஃபோட்டோ என்ஹான்ஸ்மென்ட் என்ஜின் போன்ற அம்சங்கள் உள்ளன. Moto AI அம்சமானதுAI அடாப்டிவ் ஸ்டெபிலைசேஷன் போன்ற கூடுதல் அம்சங்களையும் வீடியோக்களில் உள்ள ஷேக்னஸை குறைக்கவும் உதவுகிறது.
.