லாஜிடெக் தனது புதிய POP ஐகான் கீஸ் காம்போவை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விரிவான கீபோர்ட் மற்றும் மவுஸ் தனது யூசர்களின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது
POP ஐகான் கீஸ் காம்போ அதன் ஸ்டைலான வடிவமைப்பு மற்றும் செயல்பாட்டின் காரணமாக தனித்து நிற்கிறது, இது தொழில் வல்லுநர்கள் மற்றும் மாணவர்களுக்கு சிறந்த சேவையை வழங்குகிறது. இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள புதிய POP ஐகான் கீஸ் காம்போ நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது, இந்த கீஸ் காம்போ நீண்ட நேரம் வேலைபார்ப்பதால் ஏற்படும் அசௌகரியத்தைக் குறைக்க உதவும் என நிறுவனம் அறிவித்துள்ளது.
வயர்லெஸ் கீபோர்ட் நன்கு கஸ்டமைஸ் செய்யப்பட்ட ஆக்சன் கீக்களை கொண்டுள்ளது. அதே நேரத்தில் அதனுடன் இணைந்த POP மவுஸ் இரண்டு ஆக்சன் பட்டன்களைக் கொண்டுள்ளது. இது யூசர்களுக்கு எளிதாக வேலை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது
இந்தியாவில் லாஜிடெக் POP ஐகான் காம்போ விலை
இந்திய சந்தையில் லாஜிடெக் பிஓபி ஐகான் கீயின் விலை ₹6,695, அதே சமயம் லாஜிடெக் பிஓபி மவுஸ் ₹3,595க்கு கிடைக்கிறது. லாஜிடெக் POP ஐகான் கீகள் மற்றும் POP மவுஸ் காம்போ இரண்டையும் வாங்க ஆர்வமுள்ள யூசர்கள் இந்த சாதனங்களை ₹9,295க்கு பெறலாம். கூடுதலாக, லாஜிடெக் டெஸ்க் மேட்டை ₹2,495க்கு வாங்கலாம்.
லாஜிடெக் POP ஐகான் கீகள் மற்றும் POP மவுஸ் காம்போவை Amazon போன்ற இ-காமர்ஸ் தளங்களில் வாங்கலாம். இது ரோஸ்/ஆஃப்-ஒயிட், ஆரஞ்சு/ஆஃப்-ஒயிட், இளஞ்சிவப்பு/ஆஃப்-ஒயிட், கிராஃபைட்/ஆஃப்-ஒயிட் மற்றும் கிராஃபைட்/கிரீன் ஆகிய நான்கு புதிய வண்ணங்களில் கிடைக்கிறது.
லாஜிடெக் POP ஐகான் காம்போ அம்சங்கள்
லாஜிடெக் POP ஐகான் கீகள் மற்றும் மவுஸ் காம்போ ட்ரான்ஸ்பரண்ட் டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இதனால் இதில் வேலை செய்பவர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்குகின்றன. லாஜிடெக் POP ஐகான் காம்போவில் நான்கு ஆக்சன் கீ-க்கள் உள்ளன. இது Logi Options+ ஆப் மூலம் கூடுதல் கஸ்டமைசேஷனை அனுமதிக்கிறது.
இதையும் படிக்க:
ஏ.சி-யில் 1 டன், 1.5 டன் என குறிப்பிடுவது ஏன்? அதற்கு என்ன அர்த்தம்? பலருக்கு தெரியாத தகவல்….
இந்த அம்சங்கள் விரைவாக வேலை செய்யவும், இடைவேளை தேவைப்படும்போது ஓய்வு எடுத்து கொள்ளவும் அனுமதிக்கிறது. மேலும் இந்த ஆக்சன் கீ-க்கள் சோசியல் மீடியா ஆப்ஸ், மியூசிக் மற்றும் வீடியோ ஆப்ஸ்கள் அல்லது லாஜிடெக்கின் சொந்த லாஜி AI ப்ராம்ப்ட் பில்டர் உட்பட செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகள் ஆகியவற்றிற்கான அணுகலையும் எளிதாக பெற்று விடலாம்.
மேலும், கீபோர்ட் மற்றும் மவுஸ் இரண்டும் மல்டி-டிவைஸ் இணைப்பை சப்போர்ட் செய்கின்றன. இதன் மூலம் ஒரே நேரத்தில் விண்டோஸ், iOS, Android, Linux, ChromeOS, macOS மற்றும் iPadOS உட்பட மூன்று சாதனங்கள் வரை இணைத்துக் கொள்ளலாம், இதனால் மல்டிடாஸ்கிங் அம்சத்தை எளிதாக கையாள முடியும்.
மேலும் லாஜிடெக் POP ஐகான் கீ-க்கள் மியூட் , ஸ்கிரீன்ஷாட் மற்றும் ஈமோஜி மெனு போன்ற ஒன்-டச் ஷார்ட்கட் கீகளையும் வழங்குகின்றன. மேற்கூறிய ஆப்ஸ் மூலம் இந்த கீ-க்களை எளிதாக அணுகலாம்.
இதையும் படிக்க: ரூ.10,000-க்குள் அட்டகாசமான கேமிரா, ஹைடெக் லுக் உடன் 5G ஸ்மார்ட்போன்.. அசத்தும் சியோமி
லாஜிடெக் POP மவுஸைப் பொறுத்தவரை, இது ஒரு SmartWheel-ஐ கொண்டுள்ளது, இது துல்லியமான மூவ்மென்ட் மற்றும் வேக-ஸ்க்ரோல் அம்சத்தையும் பெற்றுள்ளது. சைலண்ட் டச் டெக்னாலஜியுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மவுஸ் கிளிக் சத்தத்தை 90 சதவீதம் வரை குறைக்கிறது. POP ஐகான் கீ-கள் AAA பேட்டரிகளில் இயங்குகின்றன, இது ஒரே சார்ஜில் 36 மாதங்கள் வரை பேட்டரி ஆயுளை வழங்குகிறது, அதே நேரத்தில் மவுஸ் 24 மாதங்கள் வரை பேட்டரி ஆயுளை பெற்றிருக்கும் என அறிவித்துள்ளனர்.
.