டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவரும் இந்தியாவின் பிரபல தொழிலதிபருமாகவும் திகழ்ந்த ரத்தன் டாடா இறந்த பிறகு, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிதித் தலைவரான PB பாலாஜி, டாடா குழுமத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நபராக மாறி வருகிறார். யார் இந்த பாலாஜி. அவரி பற்றி தெரிந்துகொள்ளலாம்.

ஏர் இந்தியா, டைட்டன், டாடா டெக்னாலஜிஸ் மற்றும் டாடா கன்ஸ்யூமர் போன்ற முக்கிய நிறுவனங்களின் போர்டுகளில் இவரது சமீபத்திய முடிவுகள் அவரது வளர்ந்து வரும் செல்வாக்கைக் கோடிட்டுக் காட்டுவதாக உள்ளன. டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரனின் நம்பிக்கையைப் பெற்றவர் பாலாஜி. அவர் தான் தனிப்பட்ட முறையில் பாலாஜியை 2017-ம் ஆண்டு டாடா குழுமத்தில் சேர வைத்தார். டாடா நிறுவனத்தில் சேருவதற்கு முன்பு, யூனிலீவர் நிறுவனத்தில் நல்ல பதவியில் இருந்து வந்தார். இங்கு தனது நிதி மற்றும் செயல்பாட்டு நிபுணத்துவத்திற்காக அறியப்பட்டார் பாலாஜி.

விளம்பரம்

இதையும் படிக்க:
Post Office திட்டத்தில் ரூ.8 லட்சம் முதலீடு செய்தால் மாதம் எவ்வளவு கிடைக்கும்? முழு விவரம் இதோ!

யூனிலீவரின் தெற்காசியா பிரிவின் தலைமை நிதி அதிகாரியாக இருந்த பாலாஜி, யூனிலிவர் நிறுவனத்தின் முக்கிய சந்தைகளில் ஒன்றை நிர்வகித்து குறிப்பிடத்தக்க நிதி வளர்ச்சியை அடைய வைத்தார். இந்நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் சரியான நபரை தேடிக்கொண்டிருந்தது. பாலாஜியின் அணுபவம் அவரை இந்தப் பதவிக்கு பொருத்தமான நபராக ஆக்கியது.

விளம்பரம்

டாடா மோட்டார்ஸில், நிறுவனத்தை மாற்றியமைத்த முக்கியமான முன்முயற்சிகளுக்கு பாலாஜி தலைமை தாங்கினார். நிறுவனத்தின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துதல், செலவுகளைக் குறைத்தல் மற்றும் தயாரிப்பு இலாகாவை மறுசீரமைத்தல் ஆகியவற்றில் அவர் கவனம் செலுத்தினார். அவரது தந்திரமான செயல்பாடுகள் லாபகரமான வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்தது.

இதையும் படிக்க:
ரூ.24,397 கோடி சொத்து..! இங்கிலாந்தில் படிப்பு, இந்தியாவில் தொழில் – அசத்தி வரும் இளம்பெண் தொழிலதிபர்

எலக்ட்ரிக் வாகன (EV) மேம்பாட்டிற்கு வலுவான முக்கியத்துவத்துவம் கொடுத்ததோடு, கடனைக் குறைத்தல் மற்றும் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றிலும் அவர் பணியாற்றினார். இந்த தொலைநோக்கு பார்வையுடன் கூடிய நடவடிக்கையானது வேகமாக மாறிவரும் வாகனத் துறையில் டாடா மோட்டார்ஸை மற்ற நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியளிக்கும் நிறுவனமாக நிலைநிறுத்தியுள்ளது.

விளம்பரம்

பாலாஜியின் முயற்சிகள் டாடா மோட்டார்ஸின் நிதி ஆரோக்கியத்தை கணிசமாக மேம்படுத்தி, உள்நாட்டு வணிகத்தை கடனற்றதாக மாற்றியது. 2024-ம் நிதியாண்டில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் செயல்பாடுகளின் மூலம் இதுவரை இல்லாத வகையில் அதிகபட்ச வருவாயான ரூ.4.38 லட்சம் கோடியாக அதிகரித்தது. நிறுவனம் புத்துயிர் பெறுவதில் பாலாஜியின் முக்கிய பங்கை இது எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

தண்ணீர் குடிக்கும் போது நீங்கள் தவிர்க்க வேண்டிய 9 தவறுகள்.!


தண்ணீர் குடிக்கும் போது நீங்கள் தவிர்க்க வேண்டிய 9 தவறுகள்.!

பாலாஜியின் தலைமைத்துவம் பலரது கவனத்தையும் ஈர்த்தது. 2024-ம் நிதியாண்டில், பாலாஜியின் மொத்த வருவாய் ரூ.20.78 கோடியை எட்டியது. இது முந்தைய ஆண்டை விட 24 சதவிகிதம் அதிகமாகும்.

விளம்பரம்

.



Source link