பாகிஸ்தானைச் சேர்ந்த கன்டென்ட் கிரியேட்டரான ராணா ஹம்சா சைஃப், சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோ இணையத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. கார்டு அல்லது பணமில்லாமல் பணம் செலுத்தும் சீனாவின் இந்த ‘பாம் பேமென்ட்’ முறை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இன்றைய காலக்கட்டத்தில் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது.

கண் இமைக்கும் நேரத்தில் உலகம் மாறுகிறது. இந்த மாற்றங்களை பல வளர்ந்த நாடுகளிலும், அனைத்து துறைகளிலும் காணலாம். அதேபோல் சீனாவில் இருந்து ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் சீனாவின் மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பார்ப்பீர்கள். அங்குள்ள மக்கள் 2024இல் அல்ல, 2050இல் வாழ்கிறார்கள் என்பதைபோல் தோன்றும். பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபலமான நபர் ஒருவர் பகிர்ந்த வீடியோவில், ஒருவர் தனது உள்ளங்கையால் பணம் செலுத்துவதைக் காணலாம்.

விளம்பரம்

உள்ளங்கையை ஸ்கேன் செய்து பணம் செலுத்துவது இதன் சிறப்பு. பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ‘பாம் பேமென்ட்’ என்ற இந்த முறையை சீனர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த வீடியோவானது சீனாவில் உள்ள Zhuzhou என்ற இடத்தில் இருந்து எடுக்கப்பட்டது. வீடியோவில், ராணா ஹம்சா சைஃப் மற்றும் அவரது நண்பர்கள் ஒரு உள்ளூர் மளிகைக் கடைக்குச் சென்று பணம் செலுத்தும் கவுண்டரில் உள்ள சென்சார் முன் கைகளை அசைத்து பணம் செலுத்தி பொருட்களை வாங்குவதை காணலாம்.

விளம்பரம்
விளம்பரம்

பணம், கார்டு அல்லது ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் மிக எளிதாக பணம் செலுத்தும் இந்த முறையானது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த ரெஜிஸ்டர் செய்யப்பட்ட பயோமெட்ரிக் டேட்டா மூலம் இயக்கப்படுகிறது, இந்த பாம் பேமெண்ட் முறையானது வேகமான மற்றும் பாதுகாப்பான பரிவர்த்தனைகளை எளிதாக்குகிறது.

உங்கள் உள்ளங்கையில் பதிவு செய்யப்பட்டிருந்தால், சீனாவில் எங்கு வேண்டுமானாலும் கையை அசைத்து பரிவர்த்தனை செய்யலாம் என்றும் சைஃப் அந்த வீடியோவில் கூறியுள்ளார். ‘லிவிங் இன் 2050’ என்ற தலைப்பில் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட வீடியோவை இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இந்த வீடியோ வைரலானதை அடுத்து, நெட்டிசன்கள் பலர் சீனாவின் நடவடிக்கையை மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டுள்ளனர்.

இதையும் படிக்க:
Ghosts | பேய்கள் இறக்குமா…. அவை எவ்வளவு காலம் வாழும் தெரியுமா? – நிபுணர்கள் கருத்தை கேட்டால் ஷாக் ஆவீங்க!

விளம்பரம்

இது குறித்து யூசர் ஒருவர் கூறியதாவது, இது நாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார். மற்றொரு யூசர் கூறியதாவது, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் அமெரிக்கா உட்பட உலகின் பெரும்பாலான நாடுகளை விட சீனா முன்னணியில் உள்ளது. தொழில்நுட்பத்தில் சீனா எப்போதும் ஒரு படி மேலே தான் இருக்கிறது என்று யூசர் ஒருவர் கூறியுள்ளார்.

இதையும் படிக்க:
வலுவான விமானப் படையை கொண்ட டாப் 10 நாடுகள்… இந்தியாவுக்கு எந்த இடம்?

இந்த பாம் பேமெண்ட் டெக்னாலஜி தொடர்பான வீடியோவை சைஃப் பதிவு செய்வதற்கு முன், ஆர்பிஜி குழுமத்தின் தலைவரான ஹர்ஷ் கோயங்கா தனது X ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில் சீனாவின் பாம் பேமென்ட் தொழில்நுட்பம் மற்றும் அதன் தாக்கம் பற்றி விளக்குவதைக் காணலாம். பெய்ஜிங் மெட்ரோவில் சவாரி செய்ய உள்ளங்கையில் பணம் செலுத்தும் முறையைப் பயன்படுத்திய தனது அனுபவத்தை விவரிக்கும் வீடியோவை அவர் பகிர்ந்திருந்தார்.

விளம்பரம்

.





Source link