வாட்ஸ்அப் வீடியோ அழைப்புகளின்போது நீங்கள் அழகாக இல்லை என்று நினைக்கிறீர்களா? ஆம். எனில், ஃபேஸ் பியூட்டி மோட் மூலம் வீடியோ அழைப்பின்போது உங்கள் முகத்தை அழகுபடுத்தலாம். அதை எவ்வாறு ஆக்டிவேட் செய்வது என்பதை பற்றி விரிவாக பார்ப்போம். வாட்ஸ்அப் அதன் யூசர்களின் அனுபவத்தையும், பாதுகாப்பையும் மேம்படுத்த புதிய அம்சத்தை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது வாட்ஸ்அப்பின் வீடியோ அழைப்பை மேம்படுத்த புதிய அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. வாட்ஸ்அப்பின் இந்த சமீபத்திய அப்டேட்டில் வீடியோ அழைப்புகளில் ஃபில்டர்கள் மற்றும் பேக்கிரவுண்ட்கள் ஆதரவைக் கொண்டு வருகிறது, இது யூசர்களுக்கு அவர்களின் வீடியோ சேட்களில் கூடுதல் கட்டுப்பாட்டை வழங்குகிறது. இந்த அப்டேட்களானது உங்களை ஈர்க்கக்கூடியதாகவும், சுவாரஸ்யமானதாகவும் இருக்கும்.

விளம்பரம்

வாட்ஸ்அப் அதன் யூசர்களின் வீடியோ அழைப்புகளை மேம்படுத்த பியூட்டி மோட் என்ற புதிய அம்சத்தை சேர்த்துள்ளது. இதன் காரணமாக உங்கள் வீடியோ அழைப்பு இன்னும் மேம்படுத்தப்படுகிறது. இந்த பியூட்டி மோட் அம்சத்தை எப்படி இயக்குவது என்பது குறித்து பார்ப்போம்.

வீடியோ அழைப்புகளுக்கான வாட்ஸ்அப்பின் பியூட்டி மோட் என்றால் என்ன?

வீடியோ அழைப்புகளின்போது உங்கள் முகத்தை அழகாக காட்ட புதிய அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஸ்மார்ட்போன் கேமராக்களில் காணப்படும் பியூட்டி ஃபில்டர்களைப் போன்று இருக்கும். இந்த அம்சமானது வீடியோ அழைப்புகளின்போது முகத்தில் உள்ள டார்க் சர்கிள், கறைகள் மற்றும் பேட்சஸ் உள்ளிட்ட குறைகளை சரி செய்வதன் மூலம் உங்கள் முகத்தை இன்னும் அழகுப்படுத்திக் காட்டுகிறது.

விளம்பரம்

இதையும் படிக்க:
ஆன்லைன் டிஜிட்டல் பேமெண்ட் மோசடியில் சிக்கினால் என்ன செய்ய வேண்டும்?

வாட்ஸ்அப் பியூட்டி மோடை ஆக்டிவேட் செய்வது எப்படி?

  • பியூட்டி மோட் ஆனது ஆண்ட்ராய்டு மற்றும் iOS இரண்டிலும் கிடைக்கிறது. அதைப் பயன்படுத்த, இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றவும்.

  • வாட்ஸ்அப் அப்-ஐ அப்டேட் செய்யவும்: பிளே ஸ்டோர் (ஆன்ட்ராய்டு) அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் (iOS)லிருந்து வாட்ஸ்அப் இன் சமீபத்திய வெர்ஷனை அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.

  • வீடியோ அழைப்பை ஸ்டார்ட் செய்யவும்: தனி நபரோ அல்லது குழு அழைப்போ என எதுவாக இருந்தாலும் சரி, வாட்ஸ்அப்பை ஓபன் செய்து வீடியோ அழைப்புகளை ஸ்டார்ட் செய்யவும்.

  • ஐகானை கண்டறியவும்: வீடியோ அழைப்புகளின்போது, ‘லோ லைட் மோட்’ ஆப்ஷன்க்கு அடுத்ததாக ஃபேஸ் மாஸ்க் போன்ற ஐகானைப் பார்க்கவும்.

இதையும் படிக்க: 2030-ல் நீங்கள் எவ்வளவு மொபைல் டேட்டாவை பயன்படுத்துவீர்கள் தெரியுமா?

  • பியூட்டி மோட்-ஐ ஆக்டிவேட் செய்யவும்: பியூட்டி மோட்-ஐ ஆக்டிவேட் செய்ய ஐகானை கிளிக் செய்யவும். இந்த ஐகானை கிளிக் செய்த உடன் வாட்ஸ்அப் பியூட்டி மோட் செயல்படத் தொடங்கும்.

  • இன்னும் சிறந்த தோற்றத்திற்காக, இந்த அம்சத்தை ப்ளர் பேக்கிரவுண்ட் ஆப்ஷன் உடன் இணைக்கவும்.

.



Source link