கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஸ்பெயினில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 150-ஐ கடந்துள்ளது.
ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் வெலேன்சியா பகுதியில் நேற்று முன்தினம் கனமழை கொட்டித் தீர்த்தது. ஓராண்டுக்கும் மேலாக பெய்ய வேண்டிய மழை, வெறும் 8 மணிநேரத்தில் பெய்ததால், 7 கிலோ மீட்டர் தொலைவுக்கான பகுதிகள் முற்றிலும் வெள்ளக்காடாக மாறின. இதை தொடர்ந்து, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த கனமழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 150-ஐ கடந்துள்ளது.
மேலும், கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுகட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள பல வாரங்கள் அல்லது மாதங்கள் பிடிக்கும் என்று கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பல பகுதிகளுக்கு மீட்புப் படையினர் சென்றடையாத நிலையில், அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
இன்றும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு பிரதமர் பெட்ரோ சான்சேஸ் கேட்டுக் கொண்டுள்ளார். வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை அகற்றவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கவும் ஸ்பெயின் ராணுவத்துக்கு வெலேன்சியா மாகாண அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.
.