வங்கக் கரையோரம் அமைந்திருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதான தொழிலாக மீன்பிடித் தொழில் இருந்து வருகிறது. இங்கு மீன்பிடித் துறைமுகம், தருவைக்குளம், வேம்பார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றனர்.
தூத்துக்குடியில் பிடிக்கப்படும் மீன்கள் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தூத்துக்குடியிலிருந்து, தமிழ்நாட்டின் பிற பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தூத்துக்குடி நகர் பகுதியில் மீன் விற்பனைக்கு என பிரத்தியேகமான மார்க்கெட்டும் இயங்கி வருகிறது. இந்த மீன் மார்க்கெட்டில் அனைத்து வகையான மீன்களும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மார்க்கெட் தினமும் காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பரபரப்பாகச் செயல்படுகிறது. நகரின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் இங்கு வந்து தங்களுக்குத் தேவையான மீன்களை வாங்கிச் செல்கின்றனர்.
இந்நிலையில், தற்போது கார்த்திகை மாதம் தொடங்கியதால் ஏராளமான பக்தர்கள் ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொள்வார்கள் மற்றும் பல கடவுள்களை வழிப்பட்டு விரதம் மேற்கொள்வார்கள் அதனால் இன்று விற்பனையும் குறைந்து, விலையும் குறைந்து காணப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை தோறும் விறு விறுவென விற்பனை ஆகும் மீன் மார்க்கெட் கார்த்திகை மாதம் பிறந்ததால் வெறிச்சோடி காணப்படுகிறது.
இது குறித்து வியாபாரி பாலா கூறுகையில் ” தூத்துக்குடி விஓசி மார்க்கெட்டில் செயல்பட்டு வரும் மீன் மார்க்கெட்டில், நண்டு, கனவா, இறால், சாலை, நெத்திலி, நகர, ஷீலா, ஊளி போன்ற அனைத்து மீன்களும் விற்பனை செய்யப்படும் நிலையில்,. தற்போது கார்த்திகை மாதம் தொடங்கியதால் விற்பனையும் குறைந்து காணப்படுகிறது மற்றும் விலையும் குறைந்து தான் காணப்படுகின்றது. 2 கிலோ ஷீலா மீன் 700 ரூபாய் தான் விற்பனையாகிறது, கருப்பு ஊளி கிலோ 300 ரூபாய், வெள்ளை ஊளி கிலோ 450 ரூபாய், இரால் கிலோ 400 ரூபாய்க்கும், சாலை கிலோ 80 ரூபாய் வரை விற்பனையாகின்றது” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.