நடிகர் சூர்யாவின் 45-வது படத்தில், லப்பர் பந்து படத்தில் நடித்த மலையான நடிகை இணைய போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த மாதம் 14ஆம் தேதி வெளி வந்த திரைப்படம் கங்குவா. இப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்க, ஞானவேல் ராஜா தயாரித்து இருந்தார். முன்பு நடித்த படங்கள் போல் இல்லாமல் கங்குவா படம் சூர்யாவுக்கு ஒரு வரலாற்று படமாக அமைந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு படம் வரவேற்பை பெறாததால் இனி இதுபோன்ற படங்களில் நடிப்பதை தற்போதைக்கு தவிர்க்கலாம் என்ற முடிவில் சூர்யா இருப்பதாக சொல்லப்படுகிறது.

விளம்பரம்

இந்த நிலையில், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44-வது படத்தில் நடித்து முடித்திருக்கிறார் நடிகர் சூர்யா. தற்போது வரை இப்படத்திற்கு பெயர் வைக்காத நிலையில், விரைவில் படம் வெளியிடும் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்ப்பாடுகிறது.

Also Read |
அடேங்கப்பா… OTT -யில் இத்தனை கோடிக்கு விற்கப்பட்ட காங்குவா..?

இதன் பின் அடுத்த கட்டமாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா தனது 45-வது படத்தில் நடிகக்கிறார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை த்ரிஷா நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ள நிலையில், முக்கிய கதாபாத்திரத்தில் லப்பர் பந்து படத்தில் நடித்து பிரபலமான மலையாள நடிகை சுவாசிகா இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

விளம்பரம்
தொப்பை கொழுப்பை எரிக்க உறங்கும் முன் செய்ய வேண்டிய 10 எளிய பயிற்சிகள்.!


தொப்பை கொழுப்பை எரிக்க உறங்கும் முன் செய்ய வேண்டிய 10 எளிய பயிற்சிகள்.!

கங்குவா எதிர்பார்த்த அளவு இல்லாததால், சூர்யாவின் 44-வது, 45-வது படத்தின் ரிலீஸ் தேதியை அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

.



Source link