இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் புனேவில் இன்று தொடங்குகிறது. இதில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில், பெங்களூருவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

விளம்பரம்

அதன்படி, டாஸில் வென்ற நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். நியூசிலாந்து அணியில் ஒரேயொரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த போட்டியில் விளையாடிய மாட் ஹென்றிக்கு பதிலாக மிட்செல் சான்ட்னர் இடம்பெற்றுள்ளார்.

இந்திய அணியை பொறுத்தவரை, மொத்தம் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடாத சுப்மன் கில், அணியில் மீண்டும் இடம்பெற்றுள்ளார். சுப்மன் கில் அணியில் இடம்பெற்றுள்ளதால், அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் வெளியே அமரவைக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில போட்டிகளாக கே.எல். ராகுல் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என இந்திய ரசிகர்கள் கருத்து தெரிவித்துவந்த நிலையில், அவர் ஆடும் லெவனில் விளையாடவில்லை.

அதேபோல், பந்துவீச்சாளர்களில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, குல்தீப் யாதவ் மற்றும் முகமது சிராஜ் ஆகியோருக்கு இடம் மறுக்கப்பட்டுள்ளது.

Also Read |
ரூ.1 கோடிக்கு தங்கம்… ரூ.5 கோடிக்கு வீடு.. பிரியங்கா காந்தியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

அவர்களுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

முதல் டெஸ்ட் போட்டியில் அடைந்த தோல்விக்கு பழி தீர்க்கும் நோக்கில், இந்திய அணி தீவிர பயிற்சி எடுத்தது. அதே சமயம், இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றும் முனைப்பில் நியூசிலாந்து உள்ளதால், ஆட்டம் விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

.



Source link