தீபாவளி கொண்டாட்டம் கிட்டத்தட்ட நெருங்கி வந்துவிட்டது. ஷாப்பிங் செய்வதற்கு பலரும் ஆன்லைன் மூலமாகவும், கடைகளுக்கு சென்றும் தங்களுக்கு விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்ச்சியோடு வீடு திரும்புகின்றனர்.
பண்டிகை என்றாலே அதனுடன் டீல்கள் மற்றும் டிஸ்கவுண்டுகளும் வந்துவிடும். ஆனால் இந்த சூழ்நிலையை மோசடிக்காரர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்கின்றனர். டிஜிட்டல் பேமெண்ட் மோசடி என்பது தற்போது அதிகரித்து வருகிறது. நாம் கொஞ்சம் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் பணத்தை இழந்து விட வேண்டியதுதான். எனவே டிஜிட்டல் மோசடியில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்கும், ஒருவேளை மாட்டிக் கொண்டால் நாம் என்னென்ன மாதிரியான விஷயங்களை செய்ய வேண்டும் என்பதையும் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
எப்பொழுதும் அங்கீகரிக்கப்பட்ட கஸ்டமர் கேர் சர்வீஸை மட்டும் அழைக்கவும்:
ஒருவேளை நீங்கள் டிஜிட்டல் மோசடியில் மாட்டிகொண்டால் உங்களுடைய வங்கி அல்லது பேமெண்ட் வழங்குநரின் கஸ்டமர் கேர் நம்பருக்கு போன் செய்து நேரத்தை வீணடிக்காமல் அதிகாரப்பூர்வமாக பட்டியலிடப்பட்டுள்ள காண்டாக்டுகளை தொடர்பு கொண்டு உடனடியாக உங்களுடைய அக்கவுண்ட் ஃப்ரீஸ் செய்யலாம் அல்லது உங்களுடைய கார்டு அல்லது பேமெண்டை பிளாக் செய்யுங்கள். இவ்வாறு செய்வது மேலும் மோசடி செயல் நடைபெறுவதை நிறுத்தி உங்களுக்கு ரீஃபண்ட் வழங்கும் செயல்முறையை ஆக்டிவேட் செய்யலாம்.
தாமதிக்காமல் புகார் அளிக்கவும்:
மோசடியில் ஈடுபட்ட உடனேயே உங்களுடைய வங்கி அல்லது நேஷனல் சைபர் கிரைம் ஹெல்ப்லைன் போன்ற அதிகாரிகளுக்கு புகார் அளிக்கவும். நேஷனல் சைபர் கிரைம் ரிப்போர்ட்டிங் போர்ட்டலில் புகாரை பதிவு செய்யலாம் அல்லது அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகார் அளிக்கலாம்.
இதையும் படிக்க:
அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமாகியுள்ள இன்ஃபினிக்ஸ் ஜீரோ ஃபிளிப் மொபைல்.. விலை எவ்வளவு?
அனைத்து விவரங்களையும் ஆவணப்படுத்தவும்:
மோசடி ஏற்பட்டிருக்கும் சமயத்தில் பதட்டமடைவது சகஜமான ஒன்றுதான். ஆனால் இதற்காக நீங்கள் முக்கியமான தகவல்களை தவற விட்டு விடக்கூடாது. நீங்கள் ஏமாற்றப்படுகிறீர்கள் என்று உங்களுக்கு தோன்றிய அந்த நொடியில் இருந்து உங்களுக்கு கிடைக்கும் அனைத்து விவரங்களையும் டாக்குமெண்ட் செய்யுங்கள். உங்களுடைய போன் காலை பதிவு செய்வது, ஸ்கிரீன்ஷாட்களை எடுப்பது, மெசேஜ்களை காப்பி செய்வது போன்றவற்றை நீங்கள் செய்யலாம். அதுமட்டுமல்லாமல் ட்ரான்ஸ்ஷாக்ஷன் ஐடி, தேதிகள், தொகைகள் போன்றவற்றையும் நீங்கள் ஆவணப்படுத்த வேண்டும்.
உங்களுடைய பாதுகாப்பை அப்கிரேட் செய்யவும்:
உங்களுடைய பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்துவதற்கு வலிமையான மற்றும் தனித்துவமான பாஸ்வேர்டுகளை அப்டேட் செய்யுங்கள். டு ஃபாக்டர் ஆதென்டிஃபிகேஷனை ஆக்டிவேட் செய்து, வலிமையான ஆன்டி மால்வேரை இன்ஸ்டால் செய்யுங்கள். இதனை நீங்கள் ஆன் செய்த உடனேயே நல்ல பாதுகாப்பு அம்சங்களை வழங்கக்கூடிய பேமெண்ட் ஆப்ஷன்களை தேர்ந்தெடுங்கள்.
அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுதல்:
டிஜிட்டல் பேமெண்ட் மோசடிக்கு பலியாவது மிகவும் எளிது. ஒருவேளை நீங்கள் அதில் மாட்டிக் கொண்டிருந்தால் உங்களுடைய அனுபவத்தை உங்கள் நண்பர்கள், குடும்பம், பெரியவர்கள் மற்றும் சோஷியல் மீடியாவில் உள்ள பிறருடன் பகிர்ந்து கொள்ளலாம். அதற்கான சில பாதுகாப்பு குறிப்புகள் மற்றும் நீங்கள் செய்த தவறென்ன, மாறாக என்ன செய்திருக்கலாம் என்பது போன்றவற்றை பகிர்ந்து கொள்வது அவர்களை எச்சரிக்கையாக இருப்பதற்கு உதவும்.
.