இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் திருமண முறிவு குறித்து இயக்குநர் பார்த்திபன் வெளியிட்ட கருத்து கவனம் ஈர்த்துள்ளது.
இசை புயல் ஏ.ஆர்.ரகுமானை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளது திரையுலகில் அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
29 ஆண்டுகால திருமண முறிவு குறித்து வெளியிட்ட அறிக்கையில், ஒருவரையொருவர் ஆழமாக நேசித்த போதிலும், பதட்டங்களும் சிரமங்களும் அவர்களுக்கிடையே ஒரு தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கிவிட்டதை இருவரும் கண்டறிந்ததையும், இந்த முடிவு அவர்களின் உறவில் குறிப்பிடத்தக்க அழுத்தத்திற்குப் பிறகு வந்திருப்பதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Also Read:
AR Rahman Divorce: கண்ணுக்குத் தெரியாத முடிவாக..! – திருமண முறிவு குறித்து ஏ.ஆர். ரகுமான்
அதேநேரம், தங்கள் திருமண வாழ்வு முப்பது வயதை எட்டும் என்று நம்பியதாகவும், ஆனால் எல்லாமே கண்ணுக்குத் தெரியாத முடிவாகத் தெரிவதாக ஏ.ஆர்.ரகுமான் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
மேலும், கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களின் கனத்தால் நடுங்கக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ள ஏ.ஆர். ரகுமான், இதய சிதைவுகள் மீண்டும் தங்கள் இடத்தைக் கண்டுபிடிக்கவில்லை என்றாலும் அர்த்தத்தைத் தேடுவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த பலவீனமான அத்தியாயத்தை நாங்கள் கடந்து செல்லும்போது தனியுரிமைக்கு மதிப்பளித்ததற்காக தங்கள் நண்பர்களுக்கு நன்றி என்றும் ஏ.ஆர். ரகுமான் பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையே, ஏ.ஆர். ரகுமானும், அவரது மனைவியும் பிரிவதாக அறிவித்துள்ள நிலையில் இயக்குநர் பார்த்திபன் பிரிவு தொடர்பாக வெளியிட்ட எக்ஸ் பதிவு கவனம் ஈர்த்து வருகிறது.
Also Read |
AR Rahman Divorce: கண்ணுக்குத் தெரியாத முடிவாக..! – திருமண முறிவு குறித்து ஏ.ஆர். ரகுமான்
பார்த்திபன் தனது எக்ஸ் பக்கத்தில், “பிரிவு: இசை ஸ்வரங்கள் பிரிவதால் தான், பிறக்கும் ஒரு நாதமே… ‘குடைக்குள் மழை’ நான் எழுதி கார்த்திக் ராஜா இசைக்க, இசையே பாடியது. பிரிவு என்பது துக்கம் மட்டுமல்ல, புதிய அமைதியாகவும் பிறக்கலாம்.
நெருக்கம் நிகழ்த்திய சொர்க்கத்தை விட, மூச்சு முட்டும் புழுக்கமாகவும் மாறியதை சற்றே மாற்றி, விலகி நின்று அவரவர் விருப்பம் போல வாழ இனி(ய) வழியுள்ளதா என சம்மந்தப்பட்டவர்கள் ஆராயலாம்.
ஊர் கூடி உறவை கொண்டாடி வழியனுப்புதல் போலே, ஊர் விலகி ‘பிரிவு’ என்ற முடிவையும் சமமாய் மதித்து அமைதிக்கு உதவிட வேண்டும்!” என்று தெரிவித்துள்ளார்.
.