இன்ஃபினிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் சமீபத்தில் Infinix Zero Flip என்ற தனது கிளாம்ஷெல்-ஸ்டைல் ஃபோல்டபிள் ஸ்மார்ட் ஃபோனை அறிமுகம் செய்துள்ளது. இந்த மொபைலில் 6.9-இன்ச் LTPO AMOLED இன்னர் ஸ்கிரீன் மற்றும் 3.64-inch AMOLED கவர் டிஸ்ப்ளே உள்ளது.

விலை எவ்வளவு? :

இந்தியாவில் Infinix Zero Flip மொபைலின் (8GB ரேம் + 512GB இன்டர்னல் ஸ்டோரேஜ்) விலை ரூ.49,999-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ப்ளாசம் க்ளோ மற்றும் ராக் பிளாக் கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும் மற்றும் இந்தியாவில் வரும் அக்டோபர் 24 முதல் ஃபிளிப்கார்ட் மூலம் விற்பனைக்கு வர உள்ளது. வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் இந்த டிவைஸை வாங்கும் போது ரூ.5,000 தள்ளுபடியைப் பெறலாம், இதன் மூலம் Infinix Zero Flip-ன் விலை ரூ. 44,999-ஆக குறையும்.

விளம்பரம்

ஸ்பெசிஃபிகேஷன்கள் என்னென்ன? :

டூயல் நானோ சிம் ஆப்ஷன் கொண்ட இன்ஃபினிக்ஸ் ஜீரோ ஃபிளிப் ஆண்ட்ராய்டு 14-ஐ அடிப்படையாக கொண்ட நிறுவனத்தின் XOS 14.5-ல் இயங்குகிறது. 6.9-இன்ச் ஃபுல்-HD+ LTPO AMOLED இன்னர் ஸ்கிரீனுடன் UTG லேட்டர் , 120Hz ரெஃப்ரஷ் ரேட் மற்றும் 360Hz டச் சேம்ப்ளிங் ரேட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. வெளிப்புறத்தில், 240Hz டச் சேம்ப்ளிங் ரேட் மற்றும் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொட்டக்ஷனுடன் கூடிய, 3.64-இன்ச் AMOLED கவர் டிஸ்ப்ளே உள்ளது.

விளம்பரம்

இதையும் படிங்க : Redmi A4 5G: புதிய அம்சங்களுடன் ரெட்மீ ஸ்மார்ட்ஃபோன் அறிமுகம்… இந்தியாவில் எப்போது விற்பனைக்கு வரும்?

இன்ஃபினிக்ஸ் நிறுவனம் Zero Flip மொபைலில் MediaTek Dimensity 8200 சிப்செட் கொடுத்துள்ளது, இது 8GB LPDDR4X RAM உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இது 512GB UFS 3.1 ஸ்டோரேஜை கொண்டுள்ளது. இந்த மொபைலின் அவுட்டர் ஸ்கிரீனில் டூயல் கேமரா செட்டப் உள்ளது, இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷனுடன் கூடிய 50MP பிரைமரி கேமரா மற்றும் 114 டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூவுடன் கூடிய 50 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா உள்ளது. இது 4K/30fps-ல் வீடியோ ரெக்கார்டை சப்போர்ட் செய்கிறது. உட்புறத்தில், 4K/60fps இல் வீடியோவைப் பதிவுசெய்யக்கூடிய 50-MP கேமரா உள்ளது.

விளம்பரம்
மொபைல் போன் கவர் பயன்படுத்துவதால் இத்தனை தீமைகளா.?


மொபைல் போன் கவர் பயன்படுத்துவதால் இத்தனை தீமைகளா.?

Infinix Zero Flip-ல் உள்ள கனெக்டிவிட்டி ஆப்ஷன்களி 5G, 4G LTE, Wi-Fi 6, Bluetooth 5.4, GPS, NFC மற்றும் USB Type-C போர்ட் ஆகியவை அடங்கும். மேலும் இதில் டூயல் ஜேபிஎல்-டியூன்ட் ஸ்பீக்கர்ஸ் உள்ளது. பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்கான பவர் பட்டனில் ஃபிங்கர்-பிரின்ட் ஸ்கேனர் உள்ளது. இந்த ஃபோல்டபிள் மொபைல் 70W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான சப்போர்ட்டுடன் கூடிய 4,720mAh பேட்டரியை கொண்டுள்ளது.

.



Source link