தங்கள் திருமண வாழ்வு முப்பது வயதை எட்டும் என்று நம்பியதாக
ஏ.ஆர். ரகுமான் கவலை தெரிவித்துள்ளார்.
மனைவி சாய்ரா பானு விவாகரத்து அறிவிப்பை தொடர்ந்து ஏ.ஆர். ரகுமான் எக்ஸ் தள பக்கத்தில் தனது விளக்கத்தை பதிவு செய்தார். அதில், தங்கள் திருமண வாழ்வு முப்பது வயதை எட்டும் என்று நம்பியதாகவும், ஆனால் எல்லாமே கண்ணுக்குத் தெரியாத முடிவாகத் தெரிவதாகத் தெரிவித்துள்ளார்.
கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களின் கனத்தால் நடுங்கக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ள ஏ.ஆர். ரகுமான், இதய சிதைவுகள் மீண்டும் தங்கள் இடத்தைக் கண்டுபிடிக்கவில்லை என்றாலும் அர்த்தத்தைத் தேடுவதாகத் தெரிவித்துள்ளார். இந்த பலவீனமான அத்தியாயத்தை நாங்கள் கடந்து செல்லும்போது தனியுரிமைக்கு மதிப்பளித்ததற்காகத் தங்கள் நண்பர்களுக்கு நன்றி என்றும் ஏ.ஆர்.ரகுமான் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, ஏ.ஆர்.ரகுமானை விட்டுப் பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவித்தார். திருமணமாகி 29 ஆண்டுகள் கடந்த நிலையில் கணவர் ஏ.ஆர் ரகுமானை விட்டுப் பிரிவதாக மனைவி சாய்ரா அறிவித்தார்.
மேலும், திருமணமாகி பல வருடங்களுக்குப் பிறகு, கணவர் ஏ.ஆர். ரஹ்மானை விட்டுப் பிரிவதற்கான கடினமான முடிவை எடுத்துள்ளேன். உறவில் ஏற்பட்ட உணர்ச்சிப்பூர்வ முறிவுகளுக்குப் பின் எடுக்கப்பட்ட முடிவு இது என்றும் கூறியிருந்தார்.
அதேபோல், ஒருவருக்கொருவர் ஆழமான அன்பைத் தொடர்ந்து வந்த போதிலும், சில முரண்பாடுகள் தங்களுக்கு இடையேயான ஒரு தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கிவிட்டன. இந்த முரண்களைச் சரி செய்து இணைப்பை உருவாக்குவதற்கான முயற்சியில் இருவரும் தோல்வி அடைந்துவிட்டதாக உணர்கிறோம் என்றும் உருக்கமாகத் தெரிவித்திருந்தார்.
Also Read:
ஆடம்பர பங்களா முதல் கார்கள் வரை… இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் நிகர மதிப்பு எவ்வளவு தெரியுமா?
.