டி20 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி முதன் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

மகளிர் இருபது ஓவர் உலக கோப்பையை முதன்முறையாக வென்று நியூசிலாந்து அணி சாதனை படைத்துள்ளது. 9ஆவது இருபது ஓவர் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகள் களம் கண்டன. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக அமெலியா கெர் 43 ரன்கள் சேர்த்தார்.

விளம்பரம்

பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்க மகளிர் அணி, 51 ரன்கள் வரை விக்கெட்டுகளே விழாமல் நிதானமாக ஆடியது. அதனால் எளிதில் வெற்றிபெற்றுவிடும் என பலரும் நினைத்த நேரத்தில், 97 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

விக்கெட்டுகள் ஒருபுறம் சரிந்து கொண்டே சென்ற நிலையில் எடுக்க வேண்டிய ரன்ரேட்டும் மறுபுறம் அதிகரித்துக் கொண்டே சென்றது. கடைசியில் தென் ஆப்பிரிக்காவால் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 126 ரன்களே எடுக்க முடிந்ததால் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

விளம்பரம்

இதன் மூலம் நியூசிலாந்து முதன்முறையாக மகளிர் இருபது ஓவர் உலக கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளது. நியூசிலாந்துக்கு பேட்டிங்கில் மட்டுமல்லாது பந்துவீச்சிலும் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி கலக்கிய அமெலியா கெர், ஆட்டநாயகி விருதை வென்றார். அதுமட்டுமல்லாமல் தொடர் நாயகி விருதையும் அவரே தட்டிச் சென்றார்.

ஒரே நாளில் இரட்டை வெற்றி: கிரிக்கெட் உலகில் நியூசிலாந்துக்கு நேற்று இரட்டை வெற்றி வசமாகியுள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆடவர் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடந்தது. அதில் நேற்றைய கடைசி நாளில் இந்திய அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வீழ்த்தியது.

விளம்பரம்

Also Read |
26 வருட பகை! உயிரை காக்க பிரேஸ்லெட்டை நம்பும் சல்மான் கான்

3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் இன்னும் 2 போட்டிகள் எஞ்சியுள்ளன. ஆனால் நேற்றைய போட்டியில் நியூசிலாந்துக்கு கிடைத்த வெற்றி அந்த அணிக்கு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

அதற்குக் காரணம், சுமார் 35 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டி வெல்வது நியூசிலாந்துக்கு இதுவே முதன்முறை. அதிலும் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக உள்ள இந்தியாவை வீழ்த்தியது அந்த அணிக்கு கூடுதல் சிறப்பாக அமைந்தது.

நியூசிலாந்து ஆடவர் அணியின் இந்த சாதனை வெற்றி அரங்கேறிய அதே நாளில் அந்நாட்டு மகளிர் படையும் இருபது ஓவர் உலகக் கோப்பையை வென்றுள்ளது. பலமுறை கை நழுவிப் போன இந்தக் கோப்பையை முதன்முறையாக வென்று மகளிர் அணி வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளது. இதனால் நியூசிலாந்து கிரிக்கெட் ரசிகர்கள் இரட்டைக் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

விளம்பரம்

.



Source link