நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார்.

ரஞ்சி கோப்பை டெஸ்ட் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில், 3-ஆவது வீரராகக் களமிறங்கிய ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், 152 ரன்கள் விளாசி அசத்தினார். இதையடுத்து இந்திய டெஸ்ட் அணியில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. T20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காகத் தொடர்ந்து விளையாடி வந்தாலும், டெஸ்ட் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் கடைசியாக 2021-ஆம் ஆண்டு களமிறங்கினார்.

விளம்பரம்

3 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் டெஸ்ட் அணியில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிராகத் தொடரில் விளையாடும் இந்திய அணியில் ஏற்கனவே அஸ்வின், ஜடேஜா, குல்தீப், அக்‌ஷர் படேல் என 4 சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ள நிலையில், தற்போது கூடுதலாக வாஷிங்டன் சுந்தர் அணியில் இணைகிறார்.

Also Read |
மகளிர் டி20 கிரிக்கெட்: மாஸ் காட்டிய அமெலியா கெர்… முதல்முறையாக உலக கோப்பையை உச்சி முகர்ந்த நியூசி..!

முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு 2 ஓவர்கள் மட்டுமே கொடுக்கப்பட்டது.

விளம்பரம்

எனவே அவருக்குப் பதில் அடுத்த போட்டியில் வாஷிங்டன் சுந்தரை களமிறக்க கேப்டன் ரோகித் சர்மாவும், பயிற்சியாளர் கம்பீரும் திட்டமிட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

.



Source link