நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் ஜியோ தனது மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்காக புதிதாக அன்லிமிட்டெட் 5G டேட்டாவுடன் கூடிய இரண்டு ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

ஜியோவின் சமீபத்திய இந்த புதிய பிளான்களின் விலைகள் முறையே ரூ.1,028 மற்றும் ரூ.1,029 ஆகும். டேட்டா மற்றும் கால் பெனிஃபிட்ஸ்களின் அடிப்படையில் இந்த 2 புதிய பிளான்களும் ஒரே மாதிரியான நன்மைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கினாலும், ரூ.1,028 ரீசார்ஜ் பிளானானது Swiggy One Lite சப்ஸ்கிரிப்ஷனுடன் வருவதால் பிளான்களோடு கிடைக்கும் கூடுதல் பலன்கள் வேறுபடுகின்றன. அதே நேரம் மறுபுறம், ரூ.1,029 ரீசார்ஜ் பிளான் இலவச Amazon Prime Lite சப்ஸ்கிரிப்ஷனை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

விளம்பரம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தால் அதன் யூஸர்களுக்கு புதிதாக அறிவிக்கப்பட்டிருக்கும் மேற்கண்ட இரண்டு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்களுமே மொத்தமாக 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டவை ஆகும். மேலும் இந்த 2 பிளான்களுமே நாளொன்றுக்கு 2GB அளவிலான 4ஜி டேட்டாவையும், அன்லிமிட்டட் 5ஜி டேட்டாவையும், அன்லிமிட்டட் கால்ஸ் மற்றும் 84 நாட்களுக்கும் நாளொன்றுக்கு 100 இலவச எஸ்எம்எஸ்-களையும் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. கூடுதலாக மேற்கண்ட 2 பிளான்களிலும் JioTV, JioCinema மற்றும் JioCloud ஆகியவற்றுக்கான இலவச அணுகல் அடங்கும்.

விளம்பரம்

ஏற்கனவே குறிப்பிட்டபடி ரூ.1,028 பிளானை ரீசார்ஜ் செய்யும் யூஸர்கள் மூன்று மாதங்களுக்கு இலவசமாக ஸ்விக்கி ஒன் லைட் சப்ஸ்கிரிப்ஷனைப் பெறுவார்கள். இந்த சப்ஸ்கிரிப்ஷன் ரூ.600 மதிப்புள்ள பலன்களை வழங்குகிறது, இதில் ரூ.149க்கு மேலான உணவு ஆர்டர்களுக்கு 10 இலவச ஹோம் டெலிவரி, ரூ.199க்கு மேல் உள்ள இன்ஸ்டாமார்ட் ஆர்டர்களுக்கு 10 இலவச ஹோம் டெலிவரி, ரூ.60க்கு மேல் இருக்கும் Genie டெலிவரிகளுக்கு 10% தள்ளுபடி உட்பட மற்றும் பல நன்மைகள் அடக்கம். மேலும் ரூ.1,028 பிளானை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் ரூ.50 கேஷ்பேக்கை பெறலாம்.

விளம்பரம்

இதையும் படிக்க:
மீட்டிங்கில் இனி நோட்ஸ் எடுக்க வேண்டாம் – கூகுள் மீட்டின் அட்டகாச அப்டேட்கள்!

நீங்கள் ஜியோ யூஸர் மற்றும் ஆன்லைனில் அடிக்கடி உணவுகளை ஆர்டர் செய்யும் பழக்கம் இல்லை என்றால் நீங்கள் 84 நாட்களுக்கு இலவசமாக Amazon Prime Lite சப்ஸ்கிரிப்ஷனுடன் வரும் ரூ.1,029 பிளானை ரீசார்ஜ் செய்வதை கருத்தில் கொள்ளலாம். எனினும் Amazon Prime Lite சப்ஸ்கிரிப்ஷன் மூலம் Amazon Prime வழங்கும் அனைத்து நன்மைகளையும் பெற முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதில் அமேசான் பிரைம் லைட் சப்ஸ்கிரிப்ஷனில் Prime Reading, Prime Gaming, Amazon Music மற்றும் Amazon Family உள்ளிட்டவை இருக்காது. எனினும் அமேசானின் ஸ்பெஷல் விற்பனைக்கான முன்கூட்டிய அணுகல் (early access), பிரத்தியேக டீல்கள், இலவசமாக ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குள் டெலிவரி மற்றும் அமேசான் பிரைம் வீடியோஸ் போன்ற பலன்களைப் பெறலாம்.

விளம்பரம்

இதையும் படிக்க:
இது டீப்ஃபேக் மாதிரி இல்லை… இனி யாரும் தப்பிக்க முடியாது.. முக்கிய அப்டேட் சொன்ன ஜெமினி!

இலவச Netflix சப்ஸ்கிரிப்ஷனை விரும்புவோர் ரூ.1,299 அல்லது ரூ.1,799 ஆகிய விலைகளில் கிடைக்கும் பிளான்களை கருத்தில் கொள்ளலாம். நிறுவனம் இந்த 2 ப்ரீபெய்ட் பிளான்களையும் கடந்த ஆகஸ்ட்டில் அறிமுகப்படுத்தியது. இவை 84 நாட்களுக்கு அன்லிமிட்டட் 5ஜி டேட்டாவுடன் ஒரு நாளைக்கு 3GB அளவிலான 4ஜி டேட்டாவை வழங்குகிறது. இதில் ரூ.1,299 ஜியோ ப்ரீபெய்ட் பிளான் நெட்ஃபிளிக்ஸ் மொபைல் பேக்கிற்கான இலவச அணுகலையும் மறுபுறம், ரூ.1,799 திட்டம் நெட்ஃபிளிக்ஸ் பேஸிக் பிளானையும் வழங்குகிறது.

விளம்பரம்

.



Source link