கோடிக்கணக்கான மக்கள் ஸ்ட்ரீமிங், கேமிங் மற்றும் வீட்டிலிருந்தபடியே இன்டர்நெட்டை பயன்படுத்தி ஆன்லைனில் வேலை செய்வதால், முன்னெப்போதையும் விட வேகமான மற்றும் நம்பகமான வைஃபை கனெக்சன்ன் அவசியமானதாக உள்ளது.

உங்கள் வைஃபை மெதுவாக இருப்பதாக நீங்கள் உணர்கிறீர்களா.!! அதன் செயல்திறனை அதிகரிக்க மற்றும் தடையற்ற இணைப்பை அனுபவிக்க உதவும் சில எளிய டிப்ஸ்கள் இங்கே உள்ளன.

Router-ஐ சரியான இடத்தில் வைக்கவும்: உங்கள் வைஃபை கனெக்ஷனின் செயல்திறனில் Router முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் வீடு முழுவதும் வைஃபை சிக்னல்களை பரப்பும் முக்கிய பொருள் என்பதால் அதனை வீட்டின் அனைத்து இடங்களுக்கும் சிக்கனல்களை பரப்பும் சரியான இடத்தில் வைக்க வேண்டும். குறிப்பாக வீட்டின் மைய பகுதியில் வைப்பது சிறப்பு. அதே போல தடையின்றி சிக்கனல் கிடைக்க உங்கள் Router-ஐ கீழே வைப்பதை விட அலமாரி அல்லது மேஜையில் வைக்கவும்.

விளம்பரம்

தவிர வைஃபை சிக்னலில் குறுக்கிடக்கூடிய உலோகப் பொருள்கள் (குளிர்சாதனப் பெட்டிகள்), கண்ணாடிகள் மற்றும் மின்னணு சாதனங்கள் (மைக்ரோவேவ்ஸ் அல்லது கார்ட்லெஸ் போன்ஸ் போன்றவை) ஆகியவற்றிலிருந்து உங்கள் Router-ஐ விலக்கி வைக்கவும். குறிப்பாக சமையலறை அல்லது பூஜை அறைக்கு அருகில் Router-ஐ வைப்பதை தவிர்ப்பது நல்லது.

இதையும் படிக்க:
ஸ்மார்ட்போனில் இருந்து ஐபோனுக்கு டேட்டாவை ட்ரான்ஸ்ஃபர் செய்வது இனி ரொம்ப ஈசி!

ஹை-கெயின் ஆன்டனாக்கள்: பல Router-கள் சிக்கனல்களை லிமிட்டட் ரேஞ்சில் வழங்குகின்ற ஸ்டாண்டர்ட் ஆண்டனாக்களுடன் வருகின்றன. எனவே அதிக அளவில் சிக்கனல்களை வழங்கும் ஆண்டனாக்களுக்கு மேம்படுத்தி கொள்வது உங்கள் வைஃபை கவரேஜை நீட்டித்து சிக்னல் தரத்தை மேம்படுத்தும். இந்த ஆண்டனாக்கள் ஸ்பாட்லைட்ஸ் போல செயல்படுகின்றன. குறிப்பிட்ட திசைகளில் வைஃபை சிக்னலை ஃபோகஸ் செய்து உங்களுக்கு தேவைப்படும் பகுதிகளில் சிறந்த இன்டர்நெட் வேகத்தை வழங்குகிறது. ஆன்லைனிலோ அல்லது உள்ளூர் எலக்ட்ரானிக்ஸ் கடைகளிலோ மலிவு விலையில் இந்த ஆன்டனாக்களை வாங்கலாம்.

விளம்பரம்

டூயல்-பேண்ட் ரவுட்டர்: உங்கள் Wi-Fi ட்ராஃபிக்கிற்கு இரண்டு தனித்தனி பாதைகள் இருந்தால் எப்படி இருக்கு கற்பனை செய்து பாருங்கள். Dual-band router இதை தான் வழங்குகிறது. 2.4 GHz மற்றும் 5 GHz ஃப்ரிக்வென்ஸிக்களில் இவை இயங்குகின்றன. HD திரைப்படங்களை ஸ்ட்ரீமிங் செய்வது அல்லது தாமதமின்றி ஆன்லைன் கேம்களை விளையாடுவது போன்ற அதிக டேட்டா பயன்பாடுகளின் போது 5 GHz ஃப்ரிக்வென்ஸி ஸ்பீட் மற்றும் குறைவான குறுக்கீடை கொண்டிருக்கும்.

இதையும் படிக்க:
MediaTek Helio G81 உடன் அறிமுகமான Infinix Smart 9 மொபைல்.!! விவரங்கள் உள்ளே!

விளம்பரம்

சேவையின் தரத்திற்கான முன்னுரிமை: சேவையின் தரம் (QoS) என்பது உங்கள் வைஃபை நெட்வொர்க்கிற்கான டிராஃபிக் கன்ட்ரோலர் போன்றது. குறிப்பிட்ட டிவைஸ்கள் அல்லது ஆப்ஸ்களுக்கான ஃப்ரீக்வென்ஸிக்கு முன்னுரிமை அளிக்க இது அனுமதிக்கிறது. உதாரணமாக, வேலை நேரங்களில் உங்கள் ஆஃபிஸ் லேப்டாப் அல்லது மாலை நேரங்களில் உங்கள் கேமிங் கன்சோலுக்கு முன்னுரிமை அளிக்கலாம்.

பவர்லைன் அடாப்டர்ஸ்: உங்கள் வீட்டில் வைஃபை சிக்னல் கிடைக்காத ரூம் இருக்கிறதா? அப்படி என்றால் பவர்லைன் அடாப்டர் பயன்படுத்தலாம். இவை உங்கள் வீட்டின் எலெக்ட்ரிக்கல் வயரிங் மூலம் இணைய அணுகலை அணுக கடினமாக இருக்கும் இடங்களுக்கு நெட் சர்விஸை நீட்டிக்க பயன்படுகின்றன. இதற்கு ஒரு அடாப்டரை உங்கள் ரவுட்டருக்கு அருகிலுள்ள பவர் அவுட்லெட்டிலும், சிக்னல் வீக்காக இருக்கும் அறையில் மற்றொரு அடாப்டரையும் சொருக வேண்டும்.

விளம்பரம்

Router-ஐ அப்டேட்டாக வைத்திருங்கள்: ஃபார்ம்வேரை உங்கள் Router-ன் மூளையாக நினைத்துப் பாருங்கள். Router உற்பத்தி நிறுவனங்கள் அவற்றின் செயல்திறனை மேம்படுத்த, புதிய அம்சங்களைச் சேர்க்க மற்றும் பாதுகாப்பு பாதிப்புகளை சரி செய்ய அடிக்கடி firmware அப்டேட்ஸ்களை வெளியிடுகின்றனர். எனவே உங்கள் ரவுட்டரின் firmware தவறாமல் அப்டேட் செய்வது சிறந்த முறையில் இயங்குவதையும், சாத்தியமான அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பாக இருப்பதையும் உறுதி செய்கிறது.

பிளாக் ட்ரெஸ்.. பிங்க் லிப்ஸ்… யாஷிகாவின் ஹாட் பிக்ஸ்!!


பிளாக் ட்ரெஸ்.. பிங்க் லிப்ஸ்… யாஷிகாவின் ஹாட் பிக்ஸ்!!

மெஷ் வைஃபை சிஸ்டம்ஸ்: நீங்கள் ஒரு பெரிய வீட்டில் அல்லது பல மாடி கட்டிடத்தில் வசிக்கிறீர்கள் என்றால், மெஷ் வைஃபை சிஸ்டம் உதவியாக இருக்கலாம். உங்கள் வீடு முழுவதும் வைஃபை கவரேஜை உருவாக்க இந்த அமைப்புகள் மல்டிபிள் நோட்ஸ்களை (சிறிய, ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட ரவுட்டர்களை) பயன்படுத்துகின்றன. எனினும் மெஷ் சிஸ்டம்ஸ் மற்ற ஆப்ஷன்களை விட சற்றே விலை அதிகம் ஆனால் தடையற்ற கனெக்ஷனை சிறந்த முறையில் வழங்குகின்றன.

விளம்பரம்

.



Source link