இந்தியா – கனடா உறவு குறித்து நியூஸ் 18 செய்தி குழுமம் நடத்திய சர்வேயில், கனடா இந்தியாவிற்கு சாதகமாக இல்லை என்று 33 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

கனடா-இந்தியா உறவு குறித்து நாடு முழுவதும் அக்டோபர் 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை சர்வே நடத்தப்பட்டது. நேர்காணல் மற்றும் இணையதளம் வாயிலாக 8 கேள்விகள் முன்வைக்கப்பட்ட நிலையில், 4 ஆயிரத்து 254 பேர் தங்களின் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

இதில், கனடா- இந்தியா உறவு குறித்து முழுமையாக தெரியாத ஆயிரத்து 818 பேரின் கருத்துக்கள் நீக்கப்பட்டு, இறுதியாக 2 ஆயிரத்து 436 பேரின் கருத்துகள் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, கனடா இந்தியாவுக்கு நட்பு நாடாக செயல்படவில்லை என 33 சதவீதம் பேரும், காலிஸ்தான் அமைப்பினருக்கு கனடா ஆதரவாக இருப்பதாக கூறி அந்நாட்டு தூதரக அதிகாரிகளை இந்தியா வெளியேற்றியதற்கு 86 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்
உடலில் வைட்டமின் பி12 அளவை அதிகரிக்க உதவும் 9 சாறுகள்.!


உடலில் வைட்டமின் பி12 அளவை அதிகரிக்க உதவும் 9 சாறுகள்.!

மேலும், காலிஸ்தான் தீவிரவாதிகளின் செயல்பாடுகளை கனடா அரசு கண்டுகொள்ளவில்லை என 82 சதவீதம் பேரும், காலிஸ்தான் தீவிரவாதிகள் பிரச்சனையில் இந்தியா கூறுவதை நம்புவதாக 95 புள்ளி 77 சதவீதம் பேரும், நியூஸ் 18 குழுமம் நடத்திய சர்வேயில் தெரிவித்து உள்ளனர்.

.



Source link