பெரும்பாலான நபர்கள் தங்களுடைய சேமிப்பு பணங்களை முதலீடு செய்வதற்கு ஃபிக்சட் டெபாசிட்களையே விரும்புவார்கள். இதில் நமக்கு கிடைக்கக்கூடிய உறுதியளிக்கப்பட்ட ரிட்டன் மற்றும் பாதுகாப்பு காரணமாக மக்கள் இதனை தேர்வு செய்கின்றனர்.
இந்தப் பதிவில் இந்தியாவின் முன்னணி வங்கிகள் ஃபிக்சட் டெபாசிட்களுக்கு வழங்கும் வட்டி விகிதங்களை ஒப்பிட்டு பார்க்கலாம்.
Also Read:
Gold Rate: வாரத்தின் முதல் நாளே அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..! இன்றைய ரேட் என்ன தெரியுமா?
மேலும் சமீபத்தில் யெஸ் வங்கி அதனுடைய ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை குறைத்தது. அது குறித்த தகவலையும் தெரிந்து கொள்ளலாம்.
யெஸ் வங்கி ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்கள்
3 கோடி ரூபாய்க்கும் குறைவான குறிப்பிட்ட கால அளவுகள் கொண்ட டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களை 25 பேசிஸ் புள்ளிகள் குறைத்துள்ளது. இந்த மாற்றப்பட்ட ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்கள் நவம்பர் 5, 2024 முதல் அமலாகும். இந்த மாற்றத்திற்கு பிறகு வழக்கமான சிட்டிசன்கள் ஃபிக்சட் டெபாசிடிற்கு 3.25 சதவீதம் முதல் 7.75% வரை பெறுவார்கள். இதுவே சீனியர் சிட்டிசன்கள் 3.25 சதவீதம் முதல் 8.25 சதவீதம் வரையிலான வட்டி விகிதங்களை பெறுவார்கள். இவர்களுக்கான அதிகபட்ச வட்டி விகிதம் 18 மாதங்களுக்கான ஃபிக்சட் டெபாசிட்டுக்கு 7.75% மற்றும் 8.25 சதவீதம் ஆகும்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்கள்
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பொதுவான சிட்டிசன்களுக்கு 3.50 சதவீதம் முதல் 7.10 சதவீதம் வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது. சீனியர் சிட்டிசன்களுக்கு 4 சதவீதம் முதல் 7.60 சதவீதம் வரையிலான வட்டி கொடுக்கப்படுகிறது. 400 நாட்கள் கொண்ட அம்ரித் காலாஷ் என்ற சிறப்புத் திட்டத்திற்கு 7.10 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இதே திட்டத்திற்கு சீனியர் சிட்டிசன்கள் 7.60 சதவீதத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டம் 30 செப்டம்பர், 2024 வரை மட்டுமே செல்லுபடி ஆகும். மாற்றப்பட்ட வட்டி விகிதங்கள் ஜூன் 15, 2024 முதல் செல்லுபடியாகும்.
ICICI வங்கி ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்கள்
ICICI வங்கி வழக்கமான சிட்டிசன்களுக்கு 3% முதல் 7.25 சதவீதம் வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது. சீனியர் சிட்டிசன்களுக்கு 3.50 சதவீதம் முதல் 7.80 சதவீதம் வரை கொடுக்கிறது. அதிகபட்ச வட்டி விகிதம் 15 மாதங்கள் முதல் 18 மாதங்கள் கொண்ட கால அளவுகளுக்கு 7.80 சதவீதமும் 7.25% கொடுக்கப்படுகிறது. இந்த வட்டி விகிதங்கள் நவம்பர் 14, 2024 முதல் பொருந்தும்.
இதையும் படிக்க:
EPF கணக்கில் இருந்து சிறிய தொகையை வீட்டில் இருந்தபடியே வித்ட்ரா செய்வதற்கான ஸ்டெப்ஸ்!!!
HDFC வங்கி ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்கள்
HDFC வங்கி வழக்கமான சிட்டிசன்களுக்கு 3 சதவீதம் முதல் 7.35 சதவீதம் வரை வட்டியும், சீனியர் சிட்டிசன்களுக்கு 3.50 சதவீதம் முதல் 7.85 சதவீதம் வரை வட்டியும் கொடுக்கிறது. அதிகபட்ச வட்டியானது 2 வருடங்கள் 11 மாதங்கள் முதல் 35 மாதங்கள் வரையிலான கால அளவுகளுக்கு 7.25% மற்றும் 7.75 சதவீத வட்டியை கொடுக்கிறது. இந்த வட்டி விகிதங்கள் ஜூலை 24, 2024 முதல் பொருந்தும்.
கனரா வங்கி ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்கள் கனரா வங்கி 7 நாட்கள் முதல் 10 வருடங்கள் வரை மெச்சூரிட்டி ஆகக்கூடிய ஃபிக்சட் டெபாசிட்களுக்கு பொதுமக்களுக்கு 4 சதவீதம் முதல் 7.25% வரை வட்டியும், சீனியர் சிட்டிசன்களுக்கு 4 சதவீதம் முதல் 7.75% வட்டியும் கொடுக்கிறது. இதில் அதிகபட்ச வட்டி 444 நாட்கள் கொண்ட கால அளவுகளுக்கு 7.25% மற்றும் 7.75 சதவீதம் வட்டி கொடுக்கப்படுகிறது. இதில் மாற்றப்பட்ட வட்டி விகிதங்கள் ஜூலை 11, 2024 முதல் அமலாகும்.
இதையும் படிக்க:
டெபாசிட் இன்சூரன்ஸ் கிளைம் நிலையை ஈஸியா செக் பண்ண “தாவா சூசக் டிராக்கர்”
பஞ்சாப் நேஷனல் வங்கி ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்கள்
பஞ்சாப் நேஷனல் வங்கி பொது சிட்டிசன்களுக்கு 3.50 சதவீதம் முதல் 7.25% வட்டியும், சீனியர் சிட்டிசன்களுக்கு 4 சதவீதம் முதல் 7.75 சதவீத வட்டியும் கொடுக்கிறது. அதிகபட்ச வட்டி 7.25% மற்றும் 7.75% 400 நாட்கள் கொண்ட கால அளவுக்கு வழங்கப்படுகிறது. இந்த மாற்றப்பட்ட வட்டி விகிதங்கள் அக்டோபர் 1, 2024 முதல் பொருந்தும்.
.