OPPO தனது சமீபத்திய Find X8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது, இது பிரீமியம் ஸ்மார்ட்போன் பிரிவில் வந்துள்ளது. மேம்பட்ட கேமரா தொழில்நுட்பம் மற்றும் AI-இயங்கும் அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளித்து, ஃபிளாக்ஷிப் பிரிவில் உள்ள ஆப்பிள், சாம்சங் மற்றும் கூகுள் போன்ற போட்டியாளர்களுக்கு சவால் விடும்வகையில் Find X8 மற்றும் Find X8 Pro வடிவமைக்கப்பட்டுள்ளது.
Find X8 Pro விலை ₹99,999 மற்றும் Find X8க்கு ₹69,999 என்று விலை நிர்ணயம் செய்துள்ளனர். டிசம்பர் 3ஆம் தேதி முதல் OPPO இ-ஸ்டோர் மற்றும் ப்ளிப்கார்ட் உட்பட ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ரீடெய்ல் சேனல்கள் மூலம் சாதனங்கள் கிடைக்கும்.
Find X8 தொடரின் தனித்துவமான அம்சங்களில் ஒன்று அதன் குவாட்-கேமரா அமைப்பு ஆகும். குறிப்பாக ப்ரோ மாடலில் இரண்டு டெலிஃபோட்டோ லென்ஸ்கள் உள்ளன. 50MP LYT808 முதன்மை டிரிபிள் ப்ரிசம் லென்ஸ் அமைப்பு, 50MP 6X பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 120° அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா ஆகியவற்றைப் பயன்படுத்தி 50MP 3X டெலிஃபோட்டோ லென்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
கேமராக்கள் “லைட்னிங் ஸ்னாப்” போன்ற AI அம்சங்களால் இயக்கப்படுகின்றன. இது யூசர்கள் எந்த தாமதமும் இல்லாமல் வேகமாக அழகான தருணங்களைப் படம்பிடிக்க அனுமதிக்கிறது. மேலும் “டெலஸ்கோப் ஜூம்” செயல்பாடு 120x ஜூம் வரை செய்து கொள்ள அனுமதிக்கிறது.
ப்ரோ மாடல் IP68/IP69 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் ரேட்டிங்குடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மெலிதான, நான்கு கர்வ்டு கண்ணாடி டிசைனைக் கொண்டுள்ளது. இந்த போன் ஸ்பேஸ் பிளாக் மற்றும் பேர்ல் ஒயிட் நிறங்களில் கிடைக்கும். மேலும் இது 215 கிராம் எடையும், வெறும் 8.24 மிமீ தடிமனும் கொண்ட ஸ்டைலான போனாக உள்ளது.
மறுபுறம் Find X8, 193g எடையைக் கொண்டுள்ளது. இது ஸ்டார் கிரே மற்றும் ஸ்பேஸ் பிளாக் ஆகிய வண்ணங்களுடன் வருகிறது. இரண்டு மாடல்களும் MediaTek இன் Dimensity 9400 சிப்செட் மூலம் இயக்கப்படுகின்றன. மேலும், இது 3nm தொழில்நுட்பத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. சிப்செட் ஆற்றல் திறன் மற்றும் AI செயலாக்க வேகத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கொண்டுவந்துள்ளதாக நிறுவனம் உறுதி அளித்துள்ளது. இது கேமிங் மற்றும் அன்றாட பணிகளுக்கு மிகவும் அவசியமாகும்.
டெக்ஸ்ட் எடிட்டிங் ( text editing ), ஆவணங்களை சுருங்குவது (real-time document summarisation) மற்றும் ட்ரான்ஸ்லேஷன் போன்ற அம்சங்களுடன் கூடிய AI கருவிகளிலும் ஓப்போ பெரிதும் கவனம் செலுத்தியுள்ளது. ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான ColorOS 15இல் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன்களுக்கு ஓப்போ ஐந்து வருட OS அப்டேட் மற்றும் ஆறு வருட செக்யூரிட்டி அப்டேட் வழங்குகிறது.
இதையும் படிக்க:
இந்த ஆண்ட்ராய்டு யூசர்களுக்கு அரசாங்கம் புதிய எச்சரிக்கை: எப்படி பாதுகாப்பாக இருப்பது…?
Touch to Share அம்சம் தடையற்ற ஃபைல் ஷேரிங் அம்சத்தை வழங்குகிறது, யூசர்கள் ஐபோன்கள் மற்றும் ஐபேடுகள் உள்ளிட்ட சாதனங்களில் உள்ளதை போன்று சிரமமின்றி பயன்படுத்த உதவுகிறது. Find X8 Pro ஆனது 5,910mAh சிலிக்கான் கார்பைடு பேட்டரியைக் கொண்டுள்ளது. அதே சமயம் Find X8 மாடலில் 5,630mAh பேட்டரி உள்ளது. இரண்டும் 80W வயர்டு SUPERVOOC சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் AIRVOOC சார்ஜிங்கை ஆதரிக்கிறது, இது விரைவான பவர்-அப்களை உறுதி செய்கிறது.
இதையும் படிக்க: வாட்ஸ்அப்பில் புதிய மெசேஜ் டிராஃப்ட் அம்சம்: இனி முழுமையற்ற செய்திகள் ஒருபோதும் மறைந்துவிடாது!
“Find X8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அதிநவீன பொறியியல், நேர்த்தியுடன் இணைந்து தெளிவான புகைப்படம் எடுப்பதற்கான அல்ட்ரா-கிரேடு கேமராக்களை வழங்குகின்றன. தடையற்ற பயன்பாட்டிற்கான மிக நீண்ட கால பேட்டரி பவர் ஆகியவை உள்ளன என்று OPPO நிறுவனத்தின் SVP மற்றும் தலைமை தயாரிப்பு அதிகாரி பீட் லாவ் கூறியுள்ளார். மேலும் இந்த அப்டேட்டுகள் அனைத்தும் OPPO AI உடன் மேம்பட்ட ColorOS 15 மூலம் இயக்கப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.
.