சொந்தமாக வீடு வாங்கலாமா? அல்லது வாடகைக்கு குடியிருக்கலாமா? என்பதை தீர்மானிப்பது ஒருவரின் தனிப்பட்ட நிதி மற்றும் வாழ்க்கை முறை தேர்வாகும். இந்த இரண்டு விருப்பங்களிளும் தனித்துவமான நன்மைகள் மற்றும் குறைபாடுகள் உள்ளன. இந்நிலையில், சொந்தமாக வீடு வாங்குவது நல்லதா? அல்லது வாடகைக்கு இருப்பது சரியான தேர்வா? என்பதை தீர்மானிக்க உதவும் சில டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்.

வீடு வாங்குதல்: ஒரு வீட்டை வாங்குவதற்கு முன்பணம் செலுத்துதல், (பொதுவாக இந்தியாவில் உள்ள சொத்தின் மதிப்பில் 15-20%), பதிவுக் கட்டணம் மற்றும் பிற இறுதிச் செலவுகள் என ஒரு பெரிய முதலீடு தேவைப்படுகிறது. மேலும். சொந்த வீடு என்றால் நீண்ட கால பராமரிப்பு, சொத்து வரி மற்றும் காப்பீட்டு செலவுகளும் வருகிறது.

விளம்பரம்

வாடகை வீடு: பொதுவாக, வாடகை வீடு என வரும்போது, டெபாசிட் மற்றும் மாத வாடகைக்கு குறைந்த முன்பணமே செலவாகிறது.

Also Read:
BSNL-ன் அசர வைக்கும் அதிரடி சேவை! 500-க்கும் மேற்பட்ட நேரடி சேனல்களை பார்க்கலாம்.. முழு விவரம் இதோ!

முதலீடு மற்றும் பங்கு:

வீடு வாங்குதல்: ஒரு வீடு என்பது காலப்போக்கில் மதிப்பு வாய்ந்த ஒரு சொத்தாக மாறும் என்பது அனைவரின் நம்பிக்கை. இதன் மதிப்பு அதிகரிக்கும் போது முதலீட்டின் மீதான வருவாயை வழங்கும். அத்துடன், சொந்த வீடு நீண்ட காலத்திற்கு நிதிப் பாதுகாப்பை வழங்குகிறது. வாடகை செலவுகள் சொத்துரிமைக்கு பங்களிக்காது. மேலும் சொத்து மதிப்பீட்டிலிருந்து நீங்கள் பயனடைய மாட்டீர்கள். எனினும் வாடகைதாரர்கள் இன்னும் அதிக நெகிழ்வுத்தன்மையுடன் செல்வத்தை அதிகரிக்கலாம்.

விளம்பரம்

வீட்டு உரிமை உங்களை ஒரு குறிப்பிட்ட இடத்துடன் இணைக்கிறது. நீங்கள் ஸ்திரத்தன்மையை விரும்பினாலோ அல்லது உங்கள் தொழிலில் செட்டில் ஆகிவிட்டாலோ இது பயனளிக்கும். இருப்பினும், நீங்கள் வேலை அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காக வேறு இடத்திற்கு செல்ல வேண்டியிருந்தால், ஒரு சொத்தை விற்பது நேரத்தை எடுத்துக்கொள்வதோடு விலை உயர்ந்ததாக இருக்கும்.

வாடகை வீடு: வாடகைக்கு இருப்பது நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. உங்கள் வேலை அல்லது தனிப்பட்ட சூழ்நிலை மாறினால் கூட, நீங்கள் எளிதாக வேறு இடங்களுக்கு செல்ல இது உங்களை அனுமதிக்கிறது. இந்த நெகிழ்வுத்தன்மை இளம் தொழில் வல்லுநர்கள் அல்லது இடமாற்றம் தேவைப்படும் தொழில்களில் இருப்பவர்களுக்கு மதிப்புமிக்கதாக இருக்கிறது.

விளம்பரம்
ரசாயன உரத்தேவையை குறைப்பது எப்படி.? சூப்பர் டிப்ஸ் இதோ.!


ரசாயன உரத்தேவையை குறைப்பது எப்படி.? சூப்பர் டிப்ஸ் இதோ.!

சந்தை நிலவரம்

பொதுவாக, ரியல் எஸ்டேட் சந்தையில் ஏற்ற இறக்கம் இருக்கும். அது உச்சத்தில் இருக்கும்போது வீடு வாங்குவது அதிக செலவுகளை தரும். ஆனால் நீங்கள் நீண்ட காலத்திற்கு சொத்தை வைத்திருந்தால், இந்த ஏற்ற இறக்கங்களை நீங்கள் எதிர்கொள்ள வேண்டும். அதே நேரத்தில், இருப்பிடம் மற்றும் தேவையின் அடிப்படையில் வாடகை வீட்டின் விலை மாறுபடலாம். ஆனால் வாடகைக்கு வீடு எடுப்பவர்கள் சந்தை மதிப்பின் ஏற்ற இறக்கங்களை பற்றி கவலைப்படத் தேவையில்லை.

பராமரிப்பு மற்றும் பொறுப்புகள்

விளம்பரம்

வீட்டு உரிமையானது அதை பராமரிப்பது மற்றும் பழுது பார்ப்பது வரை என நேரத்தையும் செலவையும் அதிகமாக்கும். இருப்பினும், வீட்டை விருப்பத்திற்கு ஏற்றபடி மாற்றிக்கொள்ளும் வசதி, புதுப்பித்தல் மற்றும் மேம்பாடுகள் ஆகியவற்றின் மீது உங்களுக்கு அனைத்து உரிமையும் உள்ளது. மேலும், வீட்டு உரிமையாளர்கள் பொதுவாக பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் முக்கிய செலவுகளைக் கையாளுகின்றனர். இது வாடகை இருப்பவர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும். இதற்கிடையே, வாடகைக்கு இருப்பவர்கள் வீட்டில் தங்களுக்கு பிடித்தபடி மாற்றங்கள் எதையும் செய்ய முடியாது.

விளம்பரம்

Also Read:
2025-ம் ஆண்டில் தங்கம் விலை மேலும் உயருமா? எத்தனை சதவிகிதம் உயர வாய்ப்புள்ளது? – நிபுணர்கள் கணிப்பு என்ன?

வரி சலுகைகள்

இந்தியா உட்பட பல நாடுகளில் வீட்டு கடன்கள் வரிச் சலுகைகளை வழங்குகின்றன. நீங்கள் வருமான வரிச் சட்டத்தின் 80C மற்றும் 24(b) பிரிவின் கீழ், அசல் மற்றும் வட்டி செலுத்துதலில் விலக்குகளை பெறலாம். இந்நிலையில், வாடகைதாரர்கள் உரிமை வரி விலக்குகளில் இருந்து பயனடையவில்லை என்றாலும், சம்பளம் பெறும் நபர்கள் வாடகைக்கு வீட்டில் வசித்து, அதற்கான நிபந்தனைகளை பூர்த்தி செய்தால், வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) விலக்குகளை பெற முடியும்.

விளம்பரம்

.



Source link