தகவல் தொழில்நுட்ப உலகின் முடிசூடா மன்னனாக விளங்கும் கூகுள் நிறுவனம் தங்களது பணியாளர்களுக்கான உணவை இலவசமாக வழங்குகிறது. இதற்கு கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை கூறிய காரணம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
2004ஆம் ஆண்டு ப்ராடக்ட் மேனேஜராக பணியில் சேர்ந்தது முதல் தன்னுடைய இத்தனை கால அனுபவத்தில் கூகுள் நிறுவனம் தங்களது பணியாளர்களுக்கு வழங்கியுள்ள பல்வேறு சலுகைகளைப் பற்றி சமீபத்தில் நடந்த “தி டேவிட் ருபென்ஸ்டீயின்ஸ் ஷோ” நிகழ்ச்சியில் சுந்தர் பிச்சை பேசியிருந்தார். பணியாளர்களுக்கான சலுகைகளை வழங்குவதில் கூகுள் நிறுவனம் புகழ் பெற்றது. கூகுள் நிறுவன பணியாளர்களுக்கு தனியாக ஆயுள் காப்பீடு, ஊதியத்துடன் கூடிய விடுப்பு, பணியாளர் நலத்திட்டங்கள், வொர்க்ஃப்ரம் ஹோம் ஆகிய வசதிகள் வழங்கப்படுகின்றன.
இது போன்ற காரணத்தினால்தான் வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் 90 சதவீதம் பேர் கூகுளில் பணியில் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட விரும்புவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். அந்த நிகழ்ச்சியில்தான் கூகுள் நிறுவனம் தங்கள் பணியாளர்களுக்கு இலவசமாக உணவு வழங்குவதையும் குறிப்பிட்டார். மேலும் இது வெறும் இலவச சலுகை அல்ல என்றும் இதற்குப்பின் முக்கியமான காரணம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கூகுள் பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்குவதால், உணவருந்தும் நேரத்தில் கூகுள் அலுவலகத்தின் பல்வேறு துறைகளை சேர்ந்த பணியாளர்கள் ஒன்று கூடி அமர்ந்து உணவருந்தும் வாய்ப்பு கிடைக்கிறது. இதனால் பல்வேறு துறைகளை சேர்ந்த பணியாளர்களுக்குள் உள்ள உறவு மேம்படுவதோடு, அவர்கள் தங்களுக்குள் எண்ண ஓட்டங்களை பரிமாறிக் கொள்ளவும் நல்லதொரு சந்தர்ப்பமாக இது அமைவதாக கூறியுள்ளார். இதன் மூலம் வேலையில் ஏற்படும் பிரச்சனைகளை கையாளும் திறன் மற்றும் பணியாளர்களின் செயல்திறன் மேம்படும் என அவர் கூறியுள்ளார். நீண்டகால அடிப்படையில் இது போன்ற திட்டங்கள் கண்டிப்பாக பயனளிக்கும் என்பதால் இதை ஒரு முதலீடாக கருதுவதாகவே சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.
இதையும் படிக்க:
லாஜிடெக் POP ஐகான் கீஸ் காம்போ இந்தியாவில் அறிமுகம்.. இதன் விலை எவ்வளவு தெரியுமா?
கூகுளின் பணியாளர் தேர்விற்கான நடைமுறைகளைப் பற்றி பேசுகையில், ஒரு பணியாளரை தேர்ந்தெடுக்கும்போது அந்த பணிநிலைக்கான பல்வேறு தகுதிகளை உடைய நபரை தேர்ந்தெடுக்கவே கூகுள் விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக பொறியாளர்களை தேர்வு செய்யும்போது அவர்களிடம் அற்புதமான சாஃப்ட்வேர் டெவலப்பிங் திறமைகள் மட்டுமல்லாமல் புதிய சவால்களை எதிர்கொள்ளும் திறன் கட்டாயம் இருக்க வேண்டும் என சுந்தர் தெரிவித்துள்ளார். இவர்களை “சூப்பர் சாஃப்ட்வேர் என்ஜினியர்கள்” என அவர் குறிப்பிடுகிறார்.
இதையும் படிக்க:
வாட்ஸ்அப் யூசர்களுக்கு ஹேப்பி நியூஸ்… இனி இதை ஈஸியா செய்யலாம்! – என்ன அப்டேட் தெரியுமா?
இவ்வளவு சலுகைகளை கூகுள் நிறுவனம் வழங்கி வந்தாலும், சமீபகாலமாக சில சலுகைகளை அந்நிறுவனம் நிறுத்தியுள்ளது. 2023ம் ஆண்டில் நிறுவனத்திற்கான செலவை குறைப்பதற்காக இந்த சலுகைகளை நிறுத்துவதாக கூகுள் தெரிவித்தது. அலுவலக கஃபே திறந்திருக்கும் நேரத்தை குறைப்பது மற்றும் சமயலறையின் இடத்தை குறைப்பது போன்றவை இதில் அடங்கும். ஆனாலும் பணியாளர்களுக்கான சலுகைகளை வழங்குவதில் அந்நிறுவனம் இப்போதும் முன்னிலையில் உள்ளது.
.