மோகன் லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லூசிபர் 2 படத்துடைய ஷூட்டிங் நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மோகன்லால் நடித்த லூசிபர் திரைப்படம் கடந்த 2019 மார்ச் 18 ஆம் தேதி மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இதில் விவேக் ஓப்ராய், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், இந்திரஜித் சுகுமாரன், சாய் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ரூ. 30 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் ரூ. 175 கோடிக்கு வசூல் செய்தது. இந்த படத்தின் க்ளைமேக்ஸின்போதே 2 ஆம் பாகம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், 2 ஆம் பாகத்துடைய ஷூட்டிங் உடனடியாக தொடங்கவில்லை.

விளம்பரம்

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக லூசிபர் 2 படத்துடைய ஷூட்டிங் நடைபெற்று வந்தது. 2 ஆம் பாகத்திற்கு எம்பூரான் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், படத்தின் ஷூட்டிங் நிறை பெற்றுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதையும் படிங்க – தமிழ் டிவி சீரியல்களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை இவர்தானா? வியந்து போன ரசிகர்கள்…

முதல் பாகத்தில் நடித்த பெரும்பாலான நடிகர்கள் 2 ஆம் பாகத்திலும் இடம்பெற்றுள்ளனர். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

இந்த படத்தை தெலுங்கில் காட்ஃபாதர் என்ற பெயரில் ரீமேக் செய்தனர். இந்த படத்தில் சிரஞ்சீவி முன்னணி கேரக்டரில் நடித்திருந்தார்.

.



Source link