கலாச்சாரத்தின் தலைநகர் என்று அழைக்கப்படும் திருச்சூரில் பிறந்தவர்தான் மூத்தேடத் பஞ்சன் ராமசந்திரன். இவரை பாசமாக எம்.பி ராமசந்திரன் என்று அழைப்பதுண்டு. ஆரம்ப காலகட்டத்தில் பல தோல்விகளை சந்திந்த இவர் அக்கவுண்டண்டாக பணி புரிந்தவர். திரிச்சூர் செயின் தாமஸ் கல்லூரியில் பி.காம் படித்த இவருக்கு, வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும், சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்கிற பிடிவதாம் அதிகமாகவே இருந்தது. அதனால்தான் இன்று யாரும் தொடமுடியாத உச்சத்தில் இருக்கிறார்.

அவருக்கு துணிகளை வெண்மையாக்க ஒரு பொருள் தயாரிக்க வேண்டும் என்கிற யோசனை தோன்றுகிறது. எனவே வீட்டிலேயே ஒயிட்னர் கலவையை பயன்படுத்தி சில பரிசோதனை செய்ய அவர் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்காமல் தோல்வியில் முடிந்தது. இதனால் ஏதாவது செய்ய வேண்டும் என்கிற எண்ணம் தோன்றுகிறது.

விளம்பரம்

ஒரு நாள் கெமிக்கல் தொழிற்சாலையினுடைய புத்தகத்தை பார்க்கிறார். அதில் ஜவுளி உற்பத்தியாளர்கள் பளிச்செனும் வெள்ளை துணியை பெற ஊதா நிறம் டை பயன்படுத்த அலோசனை கூறும் குறிப்பு தென்படுகிறது. பின் உடனே வீட்டு கிச்சனில் ஊதா நிற டையை ஊற்றி கொதிக்கவைத்து அந்த பரிசோதனையை செய்ய எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கிறது.

இறுதியாக அவர் எதிர்பார்த்த குவாலிட்டியில் டை தயார் செய்கிறார். பின் தற்காலிகமாக திருச்சூரில் குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தில் தொழிற்சாலை அமைக்கிறார். தொழில் தொடங்க அண்ணனிடம் 5000 ரூபாய் கடன் வாங்குகிறார். அதை வைத்து 1983-ஆம் ஆண்டு தனது முதல் பெண் குழந்தையான ஜோதி பெயரிலேயே தொழிற்சாலையை ஆரம்பிக்கிறார். அப்படித்தான் ஜோதி ஆய்வகம் (Jyothy Laboratories) உருவாகிறது.

விளம்பரம்

News18

அவருடைய ஐடியா என்பது மண்டையை குழப்பும் அளவுக்கு அவ்வளவு பெரியது ஒன்றுமில்லை. மிகவும் எளிமையாக துணிகளை வெண்மையாக்க , பளிச்சிட வைக்க ஒரு திரவம். (liquid) அவ்வளவுதான். அப்படி உருவாக்கிய முதல் தயாரிப்புதான் உஜாலா சுப்ரீம் துணிகளை வெண்மையாக்கும் திரவம் (Ujala Supreme liquid fabric whiteners). வெறும் ஊதா நிற டை திரவம் மட்டும்தான் அவருடைய அதிகபட்ச தயாரிப்பு பொருள். துணிகளை வெண்மையாக்க அது ஒன்று மட்டுமே போதுமானது. எனவே இதை மார்கெட்டிங் செய்ய சிறந்த யுத்தியாக டார்கெட் செய்த கஸ்டமர்ஸ் குடும்பத் தலைவிகள்.

விளம்பரம்

எனவே அவருடைய இந்த உஜாலா திரவத்தை விற்பனை செய்ய 6 பெண்களை நியமிக்கிறார். அவர்கள் வீடு வீடாக சென்று ஒவ்வொரு வீட்டு குடும்பத் தலைவிகளையும் சந்தித்து விற்பனை செய்ய வேண்டும். அதற்காக அவர்கள் பேச வேண்டியது இந்த வசனங்கள் மட்டும்தான் ” 4 சொட்டு உஜாலா போதும். உங்கள் குடும்பத்தினரின் அனைத்து ஆடைகளையும் பளிச்சிட வைக்கும். கை வலிக்க அழுத்தி தேய்க்க வேண்டிய அவசியமில்லை”. அவ்வளவுதான். இந்த ஐடியா நன்கு ஒர்க் அவுட் ஆகிறது. அந்த வருடத்தின் இறுதியில் உஜாலாவின் உற்பத்தி செலவு 1440 ரூபாய் மட்டுமே. அதனால் ஈட்டிய லாபம் 40,000 ரூபாய்.

விளம்பரம்

என்னதான் எதிர்பார்த்த லாபத்தை ஈட்டியிருந்தாலும் அவருக்கான சவால்கள் மலைபோல் உயர்ந்திருந்தன. ஆம்.. அவர் தொழில் தொடங்கிய சமயத்தில் ரெக்கிட் பென்கிசர் நிறுவனத்தின் ’ராபின் புளூ’ சந்தையில் கோலோச்சியிருந்தது. எனவே அவருக்கு ராபின் புளூவை ஓவர்டேக் செய்து தனது உஜாலாவை சந்தைப்படுத்துவது என்பது பெரும் சவாலாகவே இருந்தது. பின்புதான் அவருக்கு ஒரு யோசனை உதிர்க்கிறது.

அவர் செய்தது, பெரும்பான்மையாக இருக்கும் மிடில் கிளாஸுகளை டார்கெட் செய்து சந்தை படுத்தியதுதான். உஜாலா லிக்விடை 1 ரூபாய் முதல் 45 பைசா வரை பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்ய முயற்சித்தார். அதற்காக பெருமளவு விளம்பரம் செய்தார். இந்த சமயம் அவருடைய மார்கெட்டிங் யுத்தி நன்றாகவே கைக்கொடுத்தது. பின்புதான் அந்த மேஜிக் நடக்கிறது.

விளம்பரம்

1997 ஆம் ஆண்டுகளில் உஜாலா ராக்கெட் விற்பனையில் பறக்கிறது. 100 கோடிக்கு உஜாலா விற்பனை நடக்கிறது. இதனால் பல வீடுகளில் உஜாலாதான் பழகிய பெயராக மாறி அனைவரும் துணிக்கு உஜாலா பயன்படுத்த தொடங்குகின்றனர். இதனால் ராபின் புளூ 3% மார்கெட் ஷேரில் வீழ்ச்சியை சந்திக்கிறது.

Also Read |
ஜிம்கள், நீச்சல் குளத்துடன் மும்பையில் ரூ.5,000 கோடி மதிப்புள்ள வீடு; உரிமையாளர் யார் தெரியுமா?

பின் உஜாலா யாரும் தொடமுடியாத சாம்ராஜ்யத்தை எட்டுகிறது. 35 கோடி முதலீட்டில் மேக்சோ என்னும் பெயரில் ’கொசு விரட்டி’ தயாரிப்புக்கு தனது தொழிலை விரிவு படுத்துகிறார். அந்தசமயத்தில் (1996 ஆம் ஆண்டு) டெங்கு காய்ச்சல் பெரும் அச்சுறுத்தலாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அந்த பிராண்டின் வளர்ச்சி ஜெட் வேகத்தில் பறக்கிறது. அடுத்த ஒரு வருடத்திலேயே மேக்சோ 300 கோடிக்கு விற்பனை செய்யும் பிராண்டாக உருவாகிறது.

விளம்பரம்

பின் ஜோதி தொழிற்சாலையை விரிபடுத்த நினைக்கிறார். எனவே மாயா என்னும் பெயரில் ஊதுபத்தியும், எக்ஸோ ( EXO Ba) என்னும் பெயரில் பாத்திரம் தேய்க்கும் சோப்பும் அறிமுகப்படுத்துகிறார். அது 305.69 கோடிக்கு விற்பனை செய்யும் பிராண்டாக மாறுகிறது. தொட்டதெல்லாம் பொன் என்பதுபோல் அவருடைய அனைத்து தயாரிப்புகளும் மார்கெட்டில் தனக்கென தனி இடத்தை பிடிக்கிறது. 2007 இல் 45.83 மடங்கு அதிகமாக சந்தா செலுத்திய IPO என்ற சிறப்பு பெறுகிறது. இருப்பினும், 6 மே 2011 அன்று ஜெர்மன் FMCG நிறுவனமான Henkel AGs, இந்தியாவின் வணிகத்திலிருந்து ஜோதி ஆய்வகத்தின் பங்கில் 50.97 சதவீதத்தை 617 கோடிக்கு வாங்கியபோது பெரிய திருப்பத்தை சந்திக்கிறார். அதாவது, அவருடைய பிராண்டை இந்தியா முழுவதும் விரிவுபடுத்தி மிகப்பெரும் குழுமமாக உருவாகிறது.

உடலில் புரோட்டீன் குறைபாட்டின் 8 பொதுவான அறிகுறிகள்.!


உடலில் புரோட்டீன் குறைபாட்டின் 8 பொதுவான அறிகுறிகள்.!

ஜோதி ஆய்வகம் தற்போது மிகப்பெரும் நிறுவனங்களான P&G மற்றும் HUL போன்று இதுவும் ஒரு நிறுவனமாக உருவெடுக்கிறது. காரணாம் 2013-இல் அதன் விற்பனை மதிப்பு 1017 கோடியாகவும் லாபம் 83.14 கோடியாகவும் எட்டுகிறது. நகரங்களில் 1700 கோடி விநியோகஸ்தர்களையும், கிராமப்புறங்களில் 2000 துணை பங்குகளையும் கொண்ட நிறுவனமாக வளர்ச்சியடைகிறது. ப் இந்தியா முழுவதும் உள்ள கடைகளில் 29 லட்சத்திற்கு அவருடைய தயாரிப்புகள் வாங்கப்படுகிறது.

இன்று ஜோதி ஆய்வகத்துடைய ஒட்டுமொத்த வருவாய் 2757 கோடி அதில் லாபம் 369 கோடி. தற்போது இந்தியா முழுவதிலும் 23 தொழிற்சாலைகள் வைத்துள்ளது. பிரில், எக்சோ, ஹென்கோ, மற்றும் மிஸ்டர் ஒயிட் என 25 புராடெக்டுகளை தயார் செய்கிறது. அதன் ஒட்டுமொத்த மதிப்பு 16,900 கோடியாகும். 40 வருடங்களை எட்டி இன்றளவும் யாராலும் அழிக்க முடியாதபடி நம்பர் ஒன் fabric whitener தயாரிப்பாக உஜாலா இருக்கிறது எனில் அது எம்பி ராமசந்திரன் என்னும் மனிதனின் கடின உழைப்புக்கே உரித்தானது. தற்போது ஜோதி ஆய்வகத்தை முதல் பெண்ணான ஜோதியே வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

.



Source link