கூகுள் மீட்டில் சேர்க்கப்பட்டுள்ள ’நியூ’ பட்டன் பயனர்களுக்கு புதிய அழைப்பை உருவாக்க, திட்டமிட மற்றும் குழு அழைப்பை உருவாக்குவதற்கான விருப்பங்களை எளிமையாக வழங்குகிறது.
கூகுள் அதன் வீடியோ கால் ஆப்பான கூகுள் மீட்டில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்துள்ளது. இதில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட மற்றும் புதிய ’நியூ’ பட்டன் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட கால் ஸ்கிரீனானது அழைப்புகளின்போது அடிக்கடி பயன்படுத்தப்படும் கருவிகளை நெறிப்படுத்திக் காட்டுகிறது. அதே சமயம் இந்த ’நியூ’ பட்டன் யூசர்களுக்கு புதிய அழைப்பை உருவாக்க, திட்டமிட மற்றும் குழு அழைப்பை உருவாக்குவதற்கான விருப்பங்களை வழங்குகிறது. கூடுதலாக, இது உடனடி வீடியோ அழைப்புக்கான கான்டாக்ட்ஸை எளிமையாக்கிக் காட்டுகிறது.
இந்த மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு முந்தைய வடிவமைப்பில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருப்பதுடன், தெளிவான மற்றும் எளிமையான அனுபவத்தை பயனர்களுக்கு வழங்குகிறது. கூகுள் மீட்டின் ஹோம் ஸ்கிரீனில் கீழ் வலதுபுறத்தில் ‘நியூ’ பட்டன் இடம்பெற்றுள்ளது. அதை கிளிக் செய்தால், மூன்று விருப்பங்களுடன் புதுப்பிக்கப்பட்ட ’அழைப்பைத் தொடங்கு’ என்கிற ஸ்கிரீன் வரும். அதில் ஒரு புதிய அழைப்பை உருவாக்க, கூகுள் காலெண்டரில் திட்டமிட மற்றும் குழு அழைப்பை உருவாக்குவதற்கான விருப்பங்கள் வழங்கப்படுகின்றன.
மேலும் இதில் ’பரிந்துரைகள்’ என்கிற அம்சம் கூடுதலாக இடம்பெற்றிருக்கிறது. இது முந்தைய லிஸ்ட்டின் அடிப்படையில், தற்போதைய கான்டாக்ட்ஸைக் காட்டுகிறது. எனவே யூசர்கள் ஒரே கிளிக் மூலம் அடிக்கடி கால் செய்ய இது உதவுகிறது.
இது தவிர, சர்ச் பாரில் பிரத்யேக கோட் டைப் செய்யும் விருப்பமும் சேர்க்கப்பட்டுள்ளது, இது யூசர்களை குறிப்பிட்ட கோடை பயன்படுத்தி மீட்டிங்கில் சேர உதவுகிறது. இது முன் ஏற்பாடு செய்யப்பட்ட அழைப்புகளுக்கு வசதியாக இருக்கும்.
குறிப்பிடத்தக்க வகையில், இந்த புதிய அம்சங்கள் கூகுள் மீட் வெர்ஷன் 266இல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் யூசர்களுக்கு பிரத்தியேகமாக கிடைக்கின்றன. கூகுள் மீட்டில் யூசர் அனுபவத்தை மேம்படுத்த கூகுளின் தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாக இந்த அப்டேட் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க:
இது டீப்ஃபேக் மாதிரி இல்லை… இனி யாரும் தப்பிக்க முடியாது.. முக்கிய அப்டேட் சொன்ன ஜெமினி!
சமீபத்திய அப்டேட்டை உங்களால் அணுக முடியாவிட்டால், கூகுள் ப்ளே ஸ்டோரில் உங்கள் ஆப்பை அப்டேட் செய்யுங்கள்.
சமீபத்தில், நிறுவனம் ‘டேக் நோட்ஸ் ஃபார் மீ’ எனப்படும் ‘ஜெமினி’ ஏஐ மூலம் இயங்கும் புதிய தொழில்நுட்ப அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இந்த அம்சம் மீட்டிங்கின்போது யூசர்கள் இந்த ஆப் மூலம் நோட்ஸ்களை எடுக்க உதவுகிறது. இருப்பினும், கூகுள் ஒர்க்ஸ்பேஸ் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே தற்போது இந்த அம்சம் வழங்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, கூகுள் மீட் இப்போது கூகுள் பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போனின் உள் மற்றும் வெளிப்புற கேமராக்கள் இரண்டையும் பயன்படுத்த அனுமதிக்கிறது. நிறுவனத்தின் முதல் ஃபிளாக்ஷிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான இதில், வீடியோ காலின் போதும் இதனை பயன்படுத்த முடியும். இருப்பினும், இந்த அம்சம் பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போனுக்கு பிரத்யேகமானது. இந்தியாவில் இதன் விலை ரூ.1,72,999ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க:
நம்பமுடியாத பிரீபெய்டு ஆஃபர் வெளியிட்ட Jio… வாடிக்கையாளர்கள் குஷி
இது தவிர, கூகுள் சமீபத்தில் ஜிமெயிலுக்கு ‘சம்மரி கார்டு’ என்கிற ஏஐ மூலம் இயங்கும் அம்சத்தை அறிமுகப்படுத்தியது, இது மின்னஞ்சல் வாசிப்பு அனுபவத்தை சீராக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. பல ஆப்களில் பதிவாகியிருக்கும் முக்கியமான தேதிகள், இன்வாய்ஸ்கள் மற்றும் பல முக்கியமானவற்றை இழப்பதால் ஏற்படும் பொதுவான சிக்கலைத் தீர்க்க மற்றும் யூசர்கள் மின்னஞ்சல்களை மிகவும் திறமையாக பயன்படுத்த இந்த அம்சம் உதவுகிறது.
இந்த ‘சம்மரி கார்டு’ ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கிடைக்கிறது.
.