மேற்கு மாம்பலம் பகுதியைச் சேர்ந்த குருகுகன், தனியார் தொலைக்காட்சி இசை நிகழ்ச்சியில் பாடகராக பங்கேற்று பிரபலமானவர். சென்னையில் நடந்த Happy Steet நிகழ்ச்சியில் பங்கேற்று பாடல்களை பாடி இளைஞர்களை உற்சாகப்படுத்தி வந்தார். பல இசையமைப்பாளர்களின் நேரலை நிகழ்ச்சிகளிலும் பாடகர்
குருகுகன் பங்கேற்றுள்ளார். இவர் மீது மென் பொறியாளர் ஒருவர் பரங்கிமலை காவல் நிலையில் பாலியல் புகார் அளித்திருந்தார்.
திருமணம் செய்வதாக கூறி கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்து விட்டு, பின் கருவை கலைத்து மோசடி செய்து விட்டதாக குருகுகன் மீது புகார் கூறப்பட்டிருந்தது. இந்த புகாரில் பரங்கிமலை காவல்துறையினர் பாடகரை தேடி வந்தனர். இந்த நிலையில் பாலியல் புகாரில் பாடகர் குருகுகன் கைது செய்யப்பட்டார்.
பொய்யான உத்ரவாதம் அளித்து பாலியல் உறவு வைத்தது, மிரட்டி ஆதாரங்களை அழிப்பது, தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
.
- First Published :